விநாயகர் வழிபாட்டின் வழிமுறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விநாயகர் வழிபாட்டின் வழிமுறைகள் பற்றிய பதிவுகள் :

குறிப்பிட்ட திதியில் அந்தந்த கணபதியை வணங்கிவிட்டு, வேலையை துவங்கினால் வெற்றி நிச்சயம்.

பால கணபதி 
(பிரதம திதி)

பாலகணபதியை பிரதம திதியில் வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும். சீதள நோய் குணமாகும்.

தருண கணபதி 
(துவிதியை திதி)

தருண கணபதியை துவிதியை திதியில் வணங் கினால் வலிப்பு நோய் நீங்கும். செய்கிற காரியங் களுக்கு வழித்து ணையாக அருள் புரிவார்.

பக்த கணபதி 
(திருதியை திதி)

பக்த கணபதியை திருதி யை திதியில் வணங்கி னால், ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு சென்று வசிப்பவர்களுக்கு நன்மை ஏற்படும்.

வீர கணபதி 
(சதுர்த்தி திதி)

வீர கணபதியை சதுர்த்தி திதியில் வணங்கினால் மாத விடாய் கோளாறுகள் நீங்கும். வரன் அமையும்.

சக்தி கணபதி 
(பஞ்சமி திதி)

சக்தி கணபதி யை பஞ்சமி திதியில் வணங்கி, அன்ன தானம் வழங்கிட வாகன விபத்துக்களில் இருந்து நம்மை காப் பாற்றுவார்.

த்விஜ கணபதி 
(சஷ்டி திதி)

த்விஜ கணபதியை சஷ்டி திதியில் வணங் கினால் தொழில் மேம் படும். பல ஜென்ம பாவங்கள் நீங்கும்.

சித்தி கணபதி 
(சப்தமி திதி)

சித்தி கணபதியை சப்தமி திதியில் வணங்கி னால், இரும்பு தொழில் செய்பவர்களுக்கு நன்மை ஏற்படும்.

உச்சிஷ்ட கணபதி 
(அஷ்டமி திதி)

உச்சிஷ்ட கணபதியை அஷ்டமி திதியில் வணங்கினால் கல்வித் துறையினருக்கும், கோயி லில் வேலை செய்பவர்க ளுக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

விக்ன கணபதி 
(நவமி திதி)

விக்ன கணபதியை நவமி திதியில் அபி ஷேக, ஆராதனை செய்தால், பொன் வியா பாரி, வட்டி கடை நடத்துபவர்களுக்கு தொழில் மேன்மை அடையும்.

ஷூப்ர கணபதி 
(தசமி திதி)

ஷூப்ர கணபதியை, தசமி திதியில் வணங்கினால் சினிமா, கம்ப்யூட்டர், கட்டடத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை அளிக்கும்.

ஹேரம்ப கணபதி 
(ஏகாதசி திதி)

ஹேரம்ப கணபதியை ஏகாதசி திதியில் வணங்கினால் விவசா யம், காவல்துறை, விஞ்ஞானம், பொறியியல், வரி துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சகல நன்மை கிடைக்கும்.

லட்சுமி கணபதி 
(துவாதசி திதி)

லட்சுமி கணபதியாக காட்சியளிப்பவரை துவாதசி திதியில் பொங்கல் வைத்து வணங்கினால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

மஹா கணபதி 
(த்ரயோதசி திதி)

மஹா கணபதியை பிரதமை திதி யில் வணங்கினால் உருக்கு ஆலை, எழுத்து - பத்திரிகைதுறை, விமா னம், சுங்கத்துறையின ருக்கு நன்மை ஏற்படும்.

விஜய கணபதி 
(சதுர்த்தி திதி)

விஜய கணபதியை சதுர்த்தி திதியில் வணங்கினால் நீதிமன்றங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு நன்மை கிடைக் கும். நீண்டகால வழக்குகள் தீர்வாகும்.

நிருத்த கணபதி 
(அமாவாசை அல்லது பவுர்ணமி திதி)

நிருத்த கணபதியை அமாவாசை/பவுர்ணமி தினத் தன்று வணங்கினால், பிதுர்கள், தேவதைகளின் ஆசீர்வாதமும் கிடைக்கும். குடும்ப சண்டைகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top