சித்தர்கள் அருளிய திருவண்ணாமலை கிரிவல முறை

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சித்தர்கள் அருளிய திருவண்ணாமலை கிரிவல முறை பற்றிய பதிவுகள் :

அன்னதானம் செய்தபிறகே கிரிவலம் செய்ய வேண்டும்.

இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை கிரிவலத்தை துவக்க வேண்டும்.

பூத நாராயணப் பெருமாள் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கிரிவலம் நிறைவு செய்யும் பூத நாராயணப் பெருமாள் சன்னதியின் வாசலில் இருந்து அண்ணாமலையை தரிசனம் செய்ய வேண்டும்.

இந்த தரிசனத்தினால் நீண்டகாலமாக இருந்து வந்த மன உளைச்சல்கள் அடியோடு விலகிவிடும்.

அதன் பிறகு, ஆலயத்திற்குள் செல்ல வேண்டும். மூல ஸ்தானத்தை நெருங்கும் போது, இடது பக்கத்தில் இருக்கும் உள்பிரகாரத்தில் பயணிக்க வேண்டும்.

வடமேற்கு மூலையில் துர்வாசர் மகரிஷியின் சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது. 

அவரிடம் மனப்பூர்வமாக தாம் அன்னதானம் செய்துவிட்டோம். அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதிப்பீராக என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகே, அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும். பிறகு,உண்ணா முலையம்மனல தரிசிக்க வேண்டும்.

பிறகு, நவக்கிரக சன்னதிக்கு அருகில் சுவற்றை ஒட்டி அமைந்திருக்கும் இரட்டை சித்தரகுப்தர்களை பக்கவாட்டில் தரிசிக்க வேண்டும்.

இப்படி தரிசித்தால் மட்டும் தான் அண்ணாமலைக்கு வருகை தந்தது அருணாச்சலேஸ்வரருக்கு முறைப்படி தெரிவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்.

அதன் பிறகு, கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி விட்டு, மஹா கால பைரவப்பெருமானைத் தரிசிக்க வேண்டும்.

Post a Comment

1 Comments
  1. தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி

    ReplyDelete
Post a Comment
To Top