மகாளய பட்க்ஷ தர்ப்பணம் மற்றும் அன்னதானம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மகாளய பட்க்ஷ தர்ப்பணம் மற்றும் அன்னதானம் பற்றிய பதிவுகள் :

மாதந்தோறும் ஒரு அமாவாசை என ஆண்டுக்கு 12 அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவை கூடுதல் முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

ஆடி அமாவாசை :

இந்த தினத்தில் நம் முன்னோர்களான பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து தன் சந்ததிகளைப் பார்க்க பூலோகத்திற்குப் புறப்பட்டு வருவதாக கருதப்படுகிறது.

மகாளய அமாவாசை :

பிதுர்கள் பூலோகத்தை அடைந்து தன் சந்ததியினருக்கு ஆசி வழங்கக்கூடிய காலமாக கூறப்படுகிறது.

தை அமாவாசை:

இந்த தினத்தில் பித்ருக்கள் மீண்டும் பிதுர் லோகத்திற்கு புறப்பட்டுச் செல்வதாக கருதப்படுகிறது

மகாளய பட்சம் அற்புதங்கள் :

ஆவணி மாதம் பெளர்ணமிக்கு மறுநாள் தொடங்கி, புரட்டாசி அமாவாசை வரை உள்ள காலம் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.

நமக்கெல்லாம் பிடித்த இடம் என்றால் நம் வீடு தான். அதே போல நம் முன்னோர்களுக்கும் விருப்பமான இடம் அவர்களின் இல்லம் தானே.

மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் நம் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை.

இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

பல வரலாறுகள் நிறைந்திருக்கும் நம் நாட்டில் குறைந்தபட்சம் நம் முந்தைய தலைமுறையினரின் முன்னோர்களின் பெயர்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நம் தாத்தா, கொள்ளு தாத்தா என 4 தலை முறை முன்னோர்களின் பெயர்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை நாட்குறிப்பில் குறிக்கச் சொல்ல வேண்டும்.

அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

இந்தாண்டு 11 செப்டம்பர் 2022 பதினைந்து நாட்கள் மகாளய பட்சம் ஆகும். பட்சம் என்றால் 15 என்று பொருள்.

இந்த நாட்களில் மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக நம் இல்லத்தில் கூடக்கூடிய நேரம் ஆகும்.

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையன்றும், மேலே குறிப்பிட்ட மூன்று முக்கிய அமாவாசை அன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வதால் அவர்களின் ஆசி முழுமையாகப் பெறலாம்.

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்

11 செப்டம்பர் 2022 முதல்நாள் - பிரதமை திதி : பித்ரு தோஷம் நீக்கும்

12 செப்டம்பர் 2022 இரண்டாம் நாள் - துவிதியை திதி : குழந்தைகள் பாக்கியம்

13 செப்டம்பர் 2022மூன்றாம் நாள் - திரிதியை திதி : மன அமைதி

14 செப்டம்பர் 2022 நான்காம் நாள் - சதுர்த்தி திதி : தெய்வீக தன்மை மேலோங்கி நிற்கும்

15 செப்டம்பர் 2022 ஐந்தாம் நாள் - பஞ்சமி திதி: ஐசுவரியம் சேரும்

16 செப்டம்பர் 2022 ஆறாம் நாள் - சஷ்டி திதி: புகழ் மேலோங்கி நிற்கும்

17 செப்டம்பர் 2022 ஏழாம் நாள் - சப்தமி திதி : சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைப் பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

18 செப்டம்பர் 2022 எட்டாம் நாள் - அஷ்டமி திதி : முக்தி அடையாத ஆன்மாக்கு முக்தி கிடைக்கும். அதன் முலம் நற்பலன் கிடைக்கும்

19 செப்டம்பர் 2022. ஒன்பதாம் நாள் நவமி திதி : திருமண தடை நீங்கும்.

20 செப்டம்பர் 2022 பத்தாம் நாள் - தசமி திதி : எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.

21 செப்டம்பர் 2022 பதினொன்றாம் நாள் - ஏகாதசி திதி : படிப்பு, கலையில் வளர்ச்சி

22 செப்டம்பர் 2022 பன்னிரண்டாம் நாள் - துவாதசி திதி : பொருளாதாரம் உயரும்

23 செப்டம்பர் 2022 பதின்மூன்றாம் நாள் - திரயோதசி திதி : தீர்க்காயுள்,

24 செப்டம்பர் 2022 பதினான்காம் நாள் - சதுர்த்தசி திதி : ஆரோக்கியம்

25 செப்டம்பர் 2022 பதினைந்தாம் நாள் - மகாளய அமாவாசை திதி : முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top