இறைவனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்வதால் ஏற்படும் நன்மைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து இறைவனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய பதிவுகள் :

கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி தெய்வங்களை பூக்கள் கொண்டு பூஜிப்பது தான் வழக்கம். தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் பலர் வீட்டின் பூஜையறையில் இறைவனை வண்ண மின்சார விளக்குகளால் அலங்காரம் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று.

இறைவனை தீப ஒளியின் வெளிச்சத்திலேயே தரிசிக்க வேண்டும். மேலும் நல்ல மணமுள்ள வாசனை மிகுந்த மலர்களால் மட்டுமே அலங்காரம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் பயன்படுத்தும் மலர்கள் வித்தியாசப்படும். ஒவ்வொரு வகையான பூக்களும் ஒருவிதமான பலன்களை தரும். அதைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் தனலாபம், தொழில் முன்னேற்றம் கூடும்.

மனோரஞ்சிதம், பவழமல்லி மலர்களால் அர்ச்சனை செய்தால் நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும்.

மல்லிகை, இருவாட்சி, வெண்தாமரை, நந்தியாவட்டை மலர்களால் செய்யும் அர்ச்சனை மன சஞ்சலம் நீக்கும். புத்திக்கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்றவற்றைத் தரும்.

 மரிக்கொழுந்து, மாசி பச்சை ஆகியவற்றால் அர்ச்சனை செய்தால் சுகபோகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும்.

செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்க அரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும்.

செம்பருத்தி, அடுக்கு அரளி மலர்களால் அர்ச்சனை செய்தால் ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும்.

நீலநிற சங்குப்பூவினால் அர்ச்சனை செய்தால் வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும்.

கருந்துளசி, வில்வம், மகிழம்பூ அர்ச்சனை செய்தால், சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும்.

ஒவ்வொரு மலர்களுக்கும் ஒரு குணம் உள்ளது. அதுபோல் ஒவ்வொரு பூவையும் இறைவனுக்கு பூஜிக்கும் போதும் பூவிற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top