மஹா வாராஹி தேவி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா வாராஹி தேவி பற்றிய பதிவுகள் :

அன்னை ஸ்ரீ மஹாவாராஹி மஹாசத்தியான ராஜராஜேஸ்வரியிடம் இருந்து தோன்றியவள். இவளே ராஜராஜேஸ்வரியின் படை தலைவி ஆவாள். பராசக்தியின் 7 வடிவங்களில் ஒரு வடிவம் வராஹி வடிவமாகும். 

வராஹி போர் கடவுளாவாள். வராஹி வழிபாடு வெற்றியை தருவதாக ஐதீகம். தோல்விகள் அவமானங்கள் போன்றவற்றில் இருந்து வராஹி வழிபாடு காப்பாற்றும் என்பது ஐதீகம். ஸ்ரீ வராஹி உபாசனை சிறந்த வாக்கு வன்மை தைரியம் தருவதோடு எதிர்ப்புகளை சந்தித்து வெற்றி பெரும் ஆற்றலை தருகிறது. 

இந்த தெய்வம் நேபாளத்தில் பாராஹி என்றும் புத்த மதத்தில் வஜ்ரவராஹி அல்லது மறிச்சி என்றும் அழைக்கப்படுகிறாள். 

எருமை வாகனத்துடனும் பன்றி முகத்துடன் கூடிய இந்த பெண் தெய்வம் பெரும்பாலும் தாந்த்ரீக வழிபாட்டிற்கு மட்டுமே வழிபட்டு வரப்படுகிறது. மஹாசக்தியான துர்கா தேவியானவள் ரத்தபீஜன் என்கிற அரக்கனுடன் போரிடும்போது தன்னுள் இருந்து மஹாசக்தியை ஏழு பாகங்களாக பிரித்து போர் களத்துக்கு அனுப்புகிறாள். வராஹி அதில் ஒருவளாக இருக்கிறாள். 

தாந்திரிக முறைப்படி வழிபடப்படுவதால் இந்த தெய்வத்தாய் இரவு நேரங்களில் தான் வழிபடுவர். இந்தியாவிலேயே வாராஹிக்கு சிறப்பான கோவில் ஒடிசா மாவட்டத்தில் உள்ளது.

வட மாநிலங்களில் இவள் பாதாள பைரவியாக வணங்கப்படுகிறாள். தமிழகத்தில் சென்னை மைலாப்பூரிலும் கோவையிலும் வாராஹிக்கு கோவில்கள் உள்ளன. இங்கு பூஜைகள் எப்போதும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மட்டுமே விமர்சையாக நடைபெறும். 

வாராஹி கண் த்ரிஷ்டியை போக்கக்கூடியவள், பயத்தை அகற்றி தைரியத்தை தருபவள் வாராஹி. " ஓம் ஷாமலயா வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தானோ வராஹி ப்ரசோதயாத் " என்கிற மந்திரத்தை 108 முறை தினமும் சொல்லி வர மன பயம் துயரம் நீங்கி தோஷங்கள் விலகும். 

வராஹி தேவியை புருவ மத்தியில் தியானித்து புதன் மற்றும் சனி கிழமைகளில் வழிபட வேண்டும். வாராஹிக்கு மிளகு வடை, வெண்ணை எடுக்காத தயிர் சாதம் சுண்டல் சுக்கு சேர்த்த பணக்கம் போன்றவற்றை அளிக்கலாம். எலும்பு சம்பந்தமான பிராச்சனைகள் வாராஹியை வழிபட்டால் தீரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top