மகிழ்ச்சியைக் கொடுக்கும் மச்ச சாஸ்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும் மச்ச சாஸ்திரம் பற்றிய பதிவுகள் :

இறைவனின் படைப்புகளில் மிகப்பெரிய அற்புதமாக கருதபடுவது, மனிதர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமான அங்க லட்சணத்தில் படைத்திருப்பது ஆகும்.

வித விதமான மனிதர்களை படைப்பவர் பிரம்மா ஆவார். மனிதர்களின் எதிர்காலப் பலன்களை அவர்கள் பிறந்த நேரத்தின் அடிப்படையில் ஜாதகங்கள் கணிக்கப்பட்டு அதன் படி அவர்களின் பலன்கள் விவரிக்கப்படிகிறது.

பிரம்மா படைக்கும் மனிதர்களின் குணங்களை காட்டுவது அவர்களின் உடம்பில் இருக்கும் மச்சங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் மச்சங்கள் ஒரு சிலருக்கு ராஜயோகங்களை கொடுக்கும். ஒரு சிலருக்கு போராட்டமான வாழ்க்கையைக் கொடுக்கும்.

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அவற்றை எடுத்துரைக்க ஜோதிட சாஸ்திரம், எண்கலை, சாமுத்திரிகா லட்சணம், மச்ச சாஸ்திரம் என்றெல்லாம் பலவகை சாஸ்திரங்களை முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.

படைப்புத் தெய்வம் மனித உடல் உறுப்புகளில் வைக்கப்படும் புள்ளி மச்சம் என்று கருதப்படுகின்றது. மச்சங்கள் கருப்புநிற மச்சங்கள், பழுப்புநிற மச்சங்கள், சிவப்புநிற மச்சங்கள் என்று சிறிய வடிவிலோ, பெரிய வடிவிலோ இருக்கும்.

முகத்தில் மச்சம் இல்லாதவர்கள் முன்னேற்றத்தின் முதல் படியில் நிற்பர். இதேபோல உடலில் எல்லா இடங்களிலும் இருக்கும் மச்சங்களுக்கும் உரிய பலன்களை மச்ச சாஸ்திரம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களது உடலில் வலது, இடது பக்கத்தில் எத்தனை மச்சங்கள் உள்ளது என்பதை அறிந்து கொள்வது நல்லது. ஆண்களுக்கு வலது பக்கத்திலும், பெண்களுக்கு இடது பாகத்திலும் மச்சம் இருப்பதும் யோகம் தரும்.

ஆண்கள் :

வலது புறம்

ஆண்களுக்கு வலது கன்னத்தில் மச்சமிருந்தால் உழைப்பால் உயர்ந்தவர் என்ற பட்டத்தைப் பெறுவர்.

நெற்றியில் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் பணவரவு திருப்தி தரும்.

இடது புறம்

இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் இனிமையாகப் பழகுவர். வம்பு, வழக்குகளுக்கு போகமாட்டார்.

இடது பக்கத்தில் மச்சம் இருந்தால் எந்தக் காரியத்தையும் பொறுமையாகச் செய்து முடிப்பர்.

பெண்கள் :

வலது புறம்

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை அமையும்.

பெண்களுக்கு வலது நெற்றியில் மச்சம் இருந்தால் கணவரின் அன்பிற்கு பாத்திரமாக விளங்குவர்.

இடது புறம்

இடது கன்னத்தில் மச்சம் இருந்தால் சமயத்திற்கு ஏற்றாற் போல சாமர்த்தியமாகப் பேசுவர்.

இடது பக்கம் மச்சமிருந்தால் எதையும் யோசித்துச் செய்வதன் மூலமே நிம்மதியைப் பெற முடியும்.

இங்ஙனம் மச்ச சாஸ்திரம் நம் உடல் முழுவதிலும் உள்ள மச்சங்களை விவரித்துக் கொண்டே போகிறது. சில இடங்களில் உள்ள மச்சங்கள் சோகங்களை உருவாக்கும். அங்ஙனம் சோகங்களைக் குறிக்கும் இடத்தில் உள்ள மச்சங்களின் பலனை அறிந்து அதற்கேற்ற கிரகத்திற்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top