பூசணிக்காயை மட்டும் திருஷ்டிக்காகப் பயன்படுத்துவதன் காரணம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பூசணிக்காயை மட்டும் திருஷ்டிக்காகப் பயன்படுத்துவதன் காரணம் பற்றிய பதிவுகள் :

பழங்களில் வாழைப்பழத்துக்கும், ஆடைகளில் நூலாடைகளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. இப்படி, சுகாதாரம் மற்றும் பொருளாதார நோக்கில் பல பொருட்களுக்குச் சிறப்பு உண்டு.

திருஷ்டி மற்றும் தோஷம் விலக பூசணிக்காய் சிறந்தது. இதில் சதைப்பற்று அதிகம். இது, மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்த நீரை ஏற்று சிவப்பு நிறமாகிவிடும் (உடைக்கும்போது) இதன் சதைப்பற்று, பார்க்கும் கண்களுக்கு பிடிக்காமல் போய்விடும். இதனால் திருஷ்டி தோஷம் ஒட்டாது. அருவருப்பான காட்சியைப் பார்க்கும் மனம், இவனுக்கு இப்படியொரு பொருள் கிடைத்துவிட்டதே என்ற பொறாமை எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடும். தோஷம் தோன்றாது.

காவல் தெய்வங்களுக்கு தோஷம் விலக உயிரினங்களை பலிகொடுக்கும் நடைமுறை இருந்தது. உயிரினங்களை அழிப்பது அறம் அல்ல என்று எண்ணியவர்கள் பூசணிக்காயை உயிரினமாக பாவித்து, அதை உடைத்து மஞ்சள் சுண்ணாம்பு சேர்த்து, தெய்வத்தின் முன்னே வைப்பது மரபு.

தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறோம். நினைவுநாளில் அவரது படத்துக்கு முன் விளக்கேற்றி, ஊதுவத்தி வைத்து வணங்குகிறோம். துக்கத்தைக் கொண்டாட கறுப்பு உடை உடுத்துகிறோம். இதற்கெல்லாம் அறிவியல் சான்றுகளைத் தேடுவது இல்லை. நம் மனம், ஒன்றை விரும்பிவிட்டால் சான்றைத் தேடாது. விரும்பாததை அகற்றவே ஆதாரங்களையும் சான்றுகளையும் தேடுகிறோம்.

சிந்தனைக்கு எட்டாத விஷயங்கள் ஏராளம். குறுகிய சிந்தனை வட்டத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டும். அறிவுப் புலன்களால் தெரிந்தவை. நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்காது. விண்வெளியில் தென்படும் சந்திரன். இங்கிருந்து பார்க்கும்போது ஓர் அப்பளம் அளவிலேயே தெரியும். ஆனால் அதன் வடிவம் மிகப் பெரியது! எனவே சிந்தனையில் தெளிவு பெறுவது அவசியம்.

மனம் சார்ந்த சிந்தனையில் தெளிவு பெறுவது ஆன்மீகம். அறிவுச் சான்று ஆன்மிகத்துடன் இணைந்தது. அறிவுப் புலன்கள் அளித்த தகவலை, ஆன்மாவுடன் இணைந்த மனம் ஆராய்ந்து முடிவு தரும். அந்த அறிவுச் சான்று பூசணிக்காய் விஷயத்திலும் உண்டு.

அந்தக் காலத்தில் மனது பக்குவம் அடைய பல நடைமுறைகள் இருந்தன. அவற்றை, மேலோட்டமாகப் பார்த்தால் வெகுளித்தனமாகக் கூடத் தோன்றும். சான்றைத் தேடும் பணியில் இறங்காமல், அவற்றை நம்பிக் கடைப்பிடித்தால் விருப்பம் நிறைவேறும். மனம் திருப்திப்படும். எனவே பெரியோர்களது நடைமுறைகளைப் பின்பற்றுங்கள். நிச்சயம் பலன் உண்டு.

பூசணிக்காயை பலி கொடுத்து திருஷ்டியும் தோஷமும் விலகியதாக எண்ணுவோம், சஞ்சலத்தில் இருந்து விடுபட்டு தடுமாற்றமின்றி செயல்படுவோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top