ஆவணி சதுர்த்தசி - வளர்பிறை சுபமுகூர்த்த நாள், கதலி கவுரி விரதம், அனந்த விரதம், நடராஜர் அபிஷேக நாள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆவணி சதுர்த்தசி பற்றிய பதிவுகள் :

நடராஜப் பெருமானுக்கு ஓர் ஆண்டில் நடைபெறும் ஆறு அபிஷேக தினங்களுள் ஒன்றான ஆவணி சதுர்த்தசி திதி இன்று.

சிறப்பு : வளர்பிறை சுபமுகூர்த்த நாள், கதலி கவுரி விரதம், அனந்த விரதம், நடராஜர் அபிஷேக நாள்.

இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சந்நிதியில் எழுந்தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதிகம்.

சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். கூத்தன், சபேசன், அம்பலத்தான் என்று தன் ஆடல் கோலத்தினால் போற்றப்படுவர் நடராஜப் பெருமான். இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கியலை விளக்கும் தத்துவரூபமாகத் திகழும் நடராஜரின் திருமேனி ஐந்தொழில்களையும் புரிதலை விளக்குகிறது.

உடுக்கை படைக்கும் ஆற்றலையும், நெருப்பு அழிக்கும் ஆற்றலையும், வலக்கையின் உட்புறம் காட்டுவது அருளும் ஆற்றலையும், இடக்கை மறைக்கும் ஆற்றலையும், தூக்கிய பாதம் ஆணவத்தை அழித்தலையும், மற்றொரு பாதம் மனமாயை அழித்தலையும் குறிக்கின்றன.

இத்தகைய சிறப்புகளை உடைய நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். நடராஜர் அபிஷேகம் மாசி சதுர்த்தசி , சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகிய ஆறு தினங்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

கோயில்களில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறும். அவை, திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜை, காலசந்தி எனப்படும் காலை பூஜை, உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜை, சாயரட்சை எனப்படும் சாயங்கால பூஜை, ராக்காலம் எனப்படும் இரவு பூஜை அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை பூஜை ஆகியன.

தேவர்களுக்கு ஒருநாள் என்பது, பூவுலகில் ஓர் ஆண்டாகும். தை முதல் ஆனி வரை உத்தராயனம் என்றும் ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கிறோம். உத்தராயனம் தேவர்களின் பகல்பொழுதாகவும் தட்சிணாயனம் இரவுப் பொழுதாகவும் கருதப்படுகிறது.

எனவே நாம் ஓர் ஆண்டில், தேவர்கள் ஆறுகால பூஜைகள் செய்யும் நாள்களில் நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் இடத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் அரூபமாய் எழுந்தருளியிருப்பர் என்பது ஐதிகம். எனவே, அந்த நேரத்தில் நடராஜரின் அபிஷேகத்தை தரிசனம் செய்து நாம் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்று சொல்கிறார்கள் அடியவர்கள்.

குறிப்பாக, வறுமை நீங்கிச் செல்வச் செழிப்புடனான வாழ்க்கை அமையும். பாவங்களிலிருந்து விடுதலையும்
பிறவிப் பெருங்கடலைக் கடக்க நல்லருளும் ஸித்திக்கும் .

இன்று ஆவணி சதுர்த்தசி திதி. இன்று (9-9-2022) அனைத்து சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இன்று ஆடல் வல்லானுக்கு நடைபெறும் அற்புத அபிஷேகங்களை தரிசனம் செய்து நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறப் பெறுவோம்.

கதலி கவுரி விரதம் வாழையடி வாழையாக குலம் தழைக்கும். வாழை மரத்தின் கீழ் உமையான கௌரியை பிரதிஸ்டைச் செய்து வழிபடுதல் மற்றும் விரதமிருத்தல் கதளி கவுரி விரதம், அம்பாளுக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல்.

உடலுக்கு உற்சாகத்தையும், மனத்துக்கு தெய்விக சக்திகளையும் அளிப்பவள் இந்த தேவி. இவளுடன் திரைலோக்கிய (மோஹன) கணபதி வீற்றிருப்பதால், சகல காரியங்களிலும் ஸித்தியையும் அளிப்பாள்.

இந்த விரத நாளில் ஒரு வேளை உபவாசம் இருந்து தேவிக்குக் குங்குமார்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது நிச்சயம்.

கதலி கௌரி விரதம். இந்த விரதத்தின் மூலமாக பெண்களுக்கு அழகும் வசீகரமும் கூடும். விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும். கதலி மரம் என்பது வாழைமரத்தைக் குறிக்கும்.
வாழை மரத்தடியில் கௌரி விரதம் இருக்க வேண்டும், அல்லது வீட்டில் பலகையில் வாழை இலையை வைத்து, அதன்மீது அம்பாள் படத்தை வைத்து அலங்கரித்து விரத பூஜைகள் செய்ய வேண்டும். 

108 வாழைப் பழங்களை நிவேதனம் செய்து, பூஜை முடிந்த பின்னர், அதை சிறுமிகளுக்கு நிவேதனமாகத் தரவேண்டும். இதன் மூலமாக வாழையடி வாழையாக குலம் தழைக்கும். அனந்த விரதம் மிக மகிமை வாய்ந்த, சிறப்புமிக்க தொரு விரதம். இது ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில், விநாயக சதுர்த்திக்கு அடுத்து வரும் சதுர்த்தசி திதியில் கடைபிடிக்கப்படுகிறது. நம் கர்மவினைகளின் காரணமாக, நாம் இழந்த பொருட்களை திரும்பப் பெற உதவும் நல்லதொரு விரதம் இது.

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top