மங்களகரமான நவராத்திரி நாள் 6, பூஜை முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மங்களகரமான நவராத்திரி நாள் 6, பூஜை முறை, நேரம், நைவேத்தியம், மந்திரம் மற்றும் பலன்கள் பற்றிய பதிவுகள் :

புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கும் நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் தனிச்சிறப்பு வாய்ந்தது. இதில் ஆறாம் நாளான சஷ்டி திதி மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது. 

வழிபட வேண்டிய சக்தி தேவி: கௌமாரி, காத்யாயினி, சண்டிகா தேவி

திதி: சஷ்டி

நிறம்: சாம்பல்

மலர்: செம்பருத்தி பூக்கள்

கோலம்: கடலை மாவினால் அம்பாளின் பெயர் எழுதி கோலம் போட வேண்டும்

ராகம்: நீலாம்பரி ராகம்

நைவேத்தியம்: காலை நேரத்தில் தேங்காய் சாதம் மற்றும் மாலை நேரத்தில் பச்சை பயிறு சுண்டல்

காத்யாயினி மந்திரம்:

‘ஹே கௌரி ஷங்கர் அர்தங்கி யதா த்வம் ஷங்கர் பிரியா ததா மாம் குரு கல்யாணி கான்டகம் சுதுர்லபம்’

பலன்கள்

பல தலைமுறைகளாக தொடரும் சாபங்கள் நீங்கும், பரம்பரையாக தொடரும் பிரச்சனைகள், பய உணர்வு போகும், ஒட்டுமொத்த குடும்பமும் சுபிட்சம் பெறும்

நவராத்திரியின் ஆறாம் நாளில், காத்யாயினி, கௌமாரி, மற்றும் சண்டிகா தேவியையும், வணங்கி வழபடலாம்

நவ துர்க்கைகளில் ஒருவரான காத்யாயினி, திருமண வரம் அருள்வார். சப்த கன்னிமாரில் ஒருவரான காத்யாயினி தேவி, தீராத நோய்களையும் தீர்த்து வைப்பார்.

சண்டிகா தேவி என்பவர் மகாலட்சுமியின் மிகவும் சக்தி வாய்ந்த சொரூபங்களில் ஒருவர். சண்டிகா தேவியை வணங்கினால், பல தலைமுறைகளாக உங்கள் குடும்பத்தில் நிலவி வரும் சாபங்கள், பிரச்சனைகள், உடல் நல பாதிப்புகள், வறுமை நிலை ஆகியவை நீங்கும்.

பரம்பரையாக உள்ள பிரச்சனைகள் நீங்க, ஒரு சிறுமியை அழைத்து, நலங்கு வைத்து, விருந்து படைத்து, புதிய ஆடை வழங்கி, சண்டிகா தேவியாக வழிபடலாம்.

பூஜை செய்யும் முறை:

பூஜை அறையிலேயே கொலு வைத்திருந்தால், கொலுவுக்கு முன்பு அமர்ந்து, தினசரி அந்தந்த தேவியருக்கான மந்திரத்தை பாராயணம் செய்யலாம். 

அஷ்டலக்ஷ்மி நாமாவளி, அபிராமி அந்தாதி, ஆகிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். மேலும், சஷ்டி திதி என்பதால், கந்த சஷ்டி கவசத்தையும் ஆகியவற்றை ஒலிக்கச் செய்யலாம்.

கொலு வைக்கப்பட்ட இடத்தில், கடலை மாவினால் தேவியின் திருநாமத்தை அழகாக கோலம் இட்டு, விளக்குகள் ஏற்றி, தட்டில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, நைவேத்தியம் வைத்து கற்பூரம் காட்டி ஆரத்தி எடுக்க வேண்டும்.

கொலு வைத்த இடமும் பூஜை அறையும் தனித்தனியாக இருந்தால், இரண்டு இடங்களிலும் விளக்கேற்றி, கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.

சனிக் கிழமை அன்று முடிந்தால், நவராத்திரி பூஜை செய்த பின்பு, முருகர் மற்றும் அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

கொலு வைக்காதவர்கள், அகண்ட தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனைகளை முன்வைக்கலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top