விரதம் இருக்கும் முறைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரதம் இருக்கும் முறைகள் பற்றிய பதிவுகள் :

அமாவாசை, சதுர்த்தி, பௌர்ணமி, முன்னோர் திதி என எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி வந்தாலும் நாம் அனைவரும் விரதம் இருப்பது இயற்கை. விரதம் என்று சொன்னால் பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். 

விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல. உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள்.

எந்த கிழமைகளில் எந்த விரதம் :

திங்கள்

நீலகண்டனை விரதமிருந்து வழிபட இதுவே உகந்த நாளாக கருதப்படுகிறது. இத்தினம், சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரையை படைத்து விரதம் இருந்தால் மேலும் நல்லது நடக்கும்.

செவ்வாய்

இத்தினத்தில் அனுமனுக்கு விரதமிருந்து வழிபடலாம். பலத்தின் கடவுளாக கருதப்படும் இவர் சிவபெருமானின் அவதாரமாக நம்பப்படுகிறார். 

புதன் :

 எந்த தொடக்கத்திலும் விநாயகரே முதன்மை பெறுவார். அனைத்து தடங்களையும் நீக்கும் வல்லவர் விநாயகர். அவரை விரதமிருந்து வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது. 

வியாழன்

விஷ்ணு, தட்சணாமூர்த்திக்கு விரதமிருந்து வழிபட உகந்த நாள் வியாழனாகும். இந்த தினங்களில் விரதமிருந்து வழிபாட்டால் திருமண தடை, வேலை இல்லாத பிரச்சனை போன்ற பிரச்சனைகள் தீரும்.

வெள்ளி

துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து வழிபடலாம்.

சனி

சனிக்கிழமைகளில் சனி பகவான், பெருமாளுக்கு, விரதமிருந்து வழிபடலாம்.

ஞாயிறு

நவகிரகத்தின் முதன்மையான புகழ் பெற்ற கடவுளான சூரிய பகவானை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுவது உகந்தது. சூரிய தோஷம் இருப்பவர்கள் இந்த நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் இன்னல்கள் தீரும்.

சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும்.

யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்கக்கூடாது?

1. முதியவர்கள்
2. வியாதியினால் மருந்து உண்பவர்கள்
3. கர்ப்பிணிகள்
4. பிரம்மச்சாரிகள்
5. சன்யாசிகள்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top