நெல்லை மாவட்டம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோயில்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நெல்லை மாவட்டம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோயில் பற்றிய பதிவுகள் :

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கிறது அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோயில். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த  கோயிலில் இறைவன் காசிநாதராகவும், அம்பாள் மரகதாம்பிகையாகவும் அருள்பாலிகின்றனர்.

கோயில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 82 அடி உயரமும் ஒன்பது அங்குலம் நிலை மட்டத்திலிருந்து 57 அடி உயரம் கொண்ட ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் கரையில் ஆறு தீர்த்தக்கட்டங்கள் இருக்கிறது. தேவி தீர்த்தம், சாரா தீர்த்தம், தீப தீர்த்தம், காசிய தீர்த்தம், புளிமாரி தீர்த்தம், கோக்கில தீர்த்தம் என ஆறு தீர்த்தக்கட்டங்களை கொண்டிருக்கிறது.

இக்கோயிலில் உள்ள லிங்கம் காசிப முனிவரின் யாக அக்கினியில் உதித்த லிங்கம் என்பர். இக்கோவிலின் தலவிருட்சம் நெல்லி மரமாகும். இக்கோயில் இரண்டு மூலஸ்தானங்கள் பெற்றிருப்பது சிறப்பாகும். மூலவர் காசிநாதர் மரகதாம்பிகையுடன் கிழக்கு முகமாக காட்சி அளிக்கிறார். கோயில் உத்தரகாரத்தின் வடபாகத்தில் பெருமாளுக்கு எதிராக எரித்தாட்கொண்ட மூர்த்தியாக இரண்டாவது மூலஸ்தானம் அமைந்திருக்கிறது.

மன்னர் ஒருவர் தீராத கொடிய நோயினால் அவதிப்பட்டார். அப்போது தாமிரபரணி நதியின் நீராடி காசிநாதரையும், மரகதாம்பிகையும் வழிபட்டதால் நோய் குணமானது. நோய் குணமான மகிழ்ச்சியை கோயிலுக்காக பொன்னும் பொருளும் அக்கோயிலில் அர்ச்சகரிடம் வழங்கி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு கூறினார்.

பொன், பொருள் எதுவும் மன்னர் தன்னிடம் தரவில்லை எனக் கூறி பொய் சத்தியம் செய்தார் அர்ச்சகர். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் அர்ச்சகரை மரத்தோடு வைத்து எரித்து நீதியை நிலைநாட்ட எரித்தாட்கொண்ட மூர்த்தியாக தோற்றினார்.

ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதியின் நடன காட்சி, திருவாட்சி பள்ளியறை மணியடி மண்டப தூண்களின் சிற்பங்கள், சபாபதி மண்டபம், வசந்த மண்டபம் என பல மண்டபங்கள் இக்கோயிலில் இருக்கிறது. ஸ்ரீ ஆறுமுக நயனார் வள்ளி தெய்வானை உடன் மயில் மீது அமர்ந்திருக்கும் சிற்பமும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்டது.

கோயில் முன்பகுதியில் உள்ள பெரிய மரக்கதவில் திருவிளையாடல் நிகழ்வை சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பங்குனி மாத திருவிழா கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் எட்டாம் திருநாள் சுவாமியும் அம்பாளும் பார்வதி பரமேஸ்வரராக அகஸ்தியருக்கு காட்சி அளிப்பது சிறப்பாகும். ஒன்பதாவது நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் சித்திரை வருட பிறப்பு பெருந்திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top