சிறப்பு வாய்ந்த ஸ்ரீ திருவாலீஸ்வரர் சமேத சௌந்தரவல்லி திருக்கோயில்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிறப்பு வாய்ந்த ஸ்ரீ திருவாலீஸ்வரர் சமேத சௌந்தரவல்லி திருக்கோயில் பற்றிய பதிவுகள் :

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அரசூர் கிராமத்தில் அழகுற அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ திருவாலீஸ்வரர் சமேத சௌந்தரவல்லி திருக்கோயில்.

அகத்திய மாமுனிவரும், பரத்வாஜரும், வானரத் தலைவன் வாலி எந்த பகுதியில் வசித்துள்ளனர். வாலி கட்டிய கோயில் என்பதால் அவரது பெயரிலேயே திருவாலீஸ்வரர் என்ற நாமத்துடன் சிவபெருமான் இங்கு அழைக்கப்படுகின்றார். வாலி கிஷ்கிந்தாபுரிக்கு பேரரசனாக இருந்தாலும் தான் தனிப்பட்ட முறையில் வழிபட சிவன் கோயில் வேண்டும் என்று தானே அதனை பிரதிஷ்டையும் செய்ய வேண்டும் என கருதி பல ஊர்களை தேடி வந்த போது அரசூர் என்ற இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகின்றது.

இங்கு தங்கி வானரப் படைகள் மூலம் ஒரு குளமும் அமைத்து அங்கு கோயில் கட்டினார் என்பது புராண கதை. கோயிலில் மூலவராகவும், உற்சவராகவும் ஸ்ரீ திருவாலீஸ்வரரும், ஆலயத்தில் அம்பாளும் செளந்தரவல்லி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கின்றார். 16 பட்டைகள் கோணங்கள் கொண்ட லிங்க வடிவமாக சிவன் இங்கு காட்சி தருகின்றார்.

நாம் 16 செல்வங்களை பெற்று இருக்கிறோம் என்கின்ற தத்துவம் கொண்ட சிவலிங்கமாக இது திகழ்கின்றது. கோயிலின் தல விருட்சமாக நாவல் மரம் அமைந்துள்ளது. இந்த தலத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜ பெருமாள், பஞ்சலிங்கங்களும் அமைந்துள்ளன.

ஸ்ரீ காலஹஸ்தி காஞ்சிபுரம், திருவானைக்கா காசி ராமேஸ்வரம் உள்ளிட்ட ஐந்து தலங்களில் உள்ள பஞ்சலிங்கங்கள் வடிவில் சிவபெருமான் இங்கு அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, கால பைரவர் உட்பட சாமி சிலைகள் பல்வேறு அழகிய வடிவிலான சிற்பங்களும் அமையப் பெற்றுள்ளன.

கோயிலில் பிரதோஷ வழிபாடு, நவராத்திரி, பங்குனி உத்திரம், ஐப்பசி அன்னாபிஷேகம், விநாயகர் பூஜைகள் விசேஷமாக நடைபெறுகின்றன. திருமணம் நடக்காதவர்கள் இங்கு வேண்டினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள எம்பெருமானையும், அம்பாளையும் தரிசித்தால் குழந்தை பேரு கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. 

சென்னை கோயம்பேட்டில் இருந்து பொன்னேரி வழியாக 5 கிலோமீட்டர் கடந்து அரசூர் கிராமத்தை அடைந்தால் அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரரை தரிசிக்கலாம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top