ஸ்படிக லிங்க வழிபாட்டின் பலன்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்படிக லிங்க வழிபாட்டின் பலன்கள் பற்றிய பதிவுகள் :

ஆயிரம் லிங்கத்தை வழிபட்டால் கிடைக்கும் புண்ணியமும், ஆயிரம் லிங்கத்திலிருந்து நமக்கு கிடைக்கப் பெறும் ஆசியும், இந்த ஒரு ஸ்படிக லிங்கத்தை வைத்து வழிபட்டால் கிடைக்கும் என்பது பொதுவான நம்பிக்கை.

இதன் தனி சிறப்பானது ஒரு வினாடிக்கு பல்லாயிரக்கணக்கான நேர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அளவிடப்பட்டுள்ளது.

இது நவக்கிரக சஞ்சார நிலைகளால், மனிதர்களுக்கு ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் சிரமமான பலன்களை நிவர்த்தி செய்யக்கூடியதாக நம்பப்படுகிறது.

இயற்கையான சுயம்பு லிங்க வடிவத்திலேயே, பூமியின் ஆழங்களிலிருந்து கிடைக்கக்கூடிய கண்ணாடி போன்ற ஒரு வகை கல் தான் ‘கிரிஸ்டல்’ எனப்படும் ‘ஸ்படிகம்’ ஆகும்.

அதன் காரணமாக ஸ்படிக லிங்கமானது அரிய சக்திகளை உடையதாக கருதப்படுகிறது. ஸ்படிக லிங்கத்தின் முன்னர் சிவ வழிபாடு மட்டும் செய்யவேண்டும் என்று வழிமுறைகள் ஏதுமில்லை. அனைத்து கடவுள் ரூபங்களையும் ஸ்படிகத்தின் வாயிலாக வழிபாடு அல்லது மந்திர ஜப வழிபாடுகள் செய்யலாம்.

வரலாற்றுக்கு முந்தைய கால கட்டத்திலேயே லிங்க வழிபாடு மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. இறைவனின் உருவமற்ற தன்மையை குறிக்கும் வகையிலும், அவனின் குணமற்ற தன்மையைக் குறிக்கும் வகையிலும் ஸ்படிக லிங்கங்கள் குறியீடுகளாகக் கருதப்பட்டு பூஜிக்கப்பட்டன.

யஜுர் வேதம் சிவனை ஜோதி ஸ்படிக மணி லிங்க வடிவானவன் என்று கூறுகிறது. சிவன் ஜோதியாகவும், லிங்க ரூபமாகவும், ஸ்படிக ரூபமாகவும் விளங்குகிறார் என்பது இதன் விளக்கம்.

ஸ்படிகம் என்பது என்ன?

ஆங்கிலத்தில் இதை ‘கிரிஸ்டல்’ என்று கூறுகிறார்கள். ஸ்படிகம் இமய மலையின் அடி வாரத்தில் ஆழமான பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்தது. இதன் தோற்றம் தூய்மையான கண்ணாடி போன்று இருக்கும்.
 
ஸ்படிக லிங்கத்திற்கு என்று எந்தவிதமான நிறமும் கிடையாது. ஸ்படிகம், பக்கத்தில் உள்ள பொருளின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியது.
இதன் இருப்பு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

ஸ்படிக லிங்கத்திற்கு காய்ச்சாத பால், பழரசம், பன்னீர், மஞ்சள் கலந்த தண்ணீர், அல்லது சுத்தமான வெறும் தண்ணீர் இவைகளில் ஏதாவது ஒன்றை வைத்து அபிஷேகம் செய்து பூவினால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டி தினந்தோறும் நெய்வேதியம் படைத்து வழிபட்டு வந்தால் நமக்கு நாம் வாழ்வில் எதிர்பார்க்க முடியாத நன்மைகளும் கூட கிடைக்கும். அந்த பூஜையின் காரணமாக வீடுகளில் ஐஸ்வரியமும், சந்தோ‌ஷமும் அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top