பஞ்சமுக ஆஞ்சநேயர்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பஞ்சமுக ஆஞ்சநேயர் பற்றிய பதிவுகள் :

சென்னை தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் உள்ள கவுரிவாக்கத்தில், பழனியப்பா நகரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள அனுமன் பஞ்சமுக ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார். மூன்று நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது.

பஞ்ச முகங்களில் கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும், நரசிம்மமுகம் தீவினைகளைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் நல்கும்.

ஐந்து முகங்கள், பத்துக்கரங்களுடன் கூடிய அனுமன் சன்னதிக்கு அருகில் விஜய விநாயகர் வீற்றிருக்கின்றார்.

பொதுவாக பஞ்சமுக அனுமன் கோயில்களில், அனுமனின் முகங்களான ஹயக்ரீவ, வராக, நரசிம்ம, வானர, கருட முகங்களில் நான்கு முகங்கள் நாற்புறம் நோக்கி இருக்க, மற்றொரு முகம் அவற்றின் மேலமைந்து இருக்கும். ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருப்பது அபூர்வம். அப்படி ஓர் அபூர்வ அமைப்பில் காணப்படுபவது தான் இத்தலத்தின் சிறப்பு.

அனுமனின் ஒவ்வொரு முகத்திற்கும் உரிய தனிச்சிறப்பாக, வராகஜெயந்தி, நரசிம்மஜெயந்தி, கருடஜெயந்தி, அனுமந்ஜெயந்தி, ஹயக்ரீவ ஜெயந்தி என தனித்தனியே எல்லா விசேஷங்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

தடைப்பட்ட காரியங்கள் நடக்கவும், திருமணப்பேறு, குழந்தைப்பேறு கிடைக்கவும் இங்குள்ள அனுமனை வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் மட்டைத் தேங்காய்களை கட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top