மஹா சிவராத்திரி விரதம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மஹா சிவராத்திரி விரதம் பற்றிய பதிவுகள் :

மஹா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவபெருமானின் கருணையை பெறலாம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும், பஞ்சாங்கத்தில் பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மஹா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி (மாசி 6ஆம் தேதி ) கொண்டாடப்படுகிறது. 

ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்குரியது. ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை வழிபாடு செய்தால் சிறப்பு.

இந்த வருடம் 2023ஆம் ஆண்டு பிரதோஷ விரதமும், மஹா சிவராத்திரியும் ஒரே நேரத்தில் வருகிறது. பிரதோஷ விரதம் இம்முறை சனிக்கிழமையில் வருவதால், இது சனி பிரதோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

1. நித்திய சிவராத்திரி
2. மாத சிவராத்திரி
3. பட்க்ஷ சிவராத்திரி
4. யோக சிவராத்திரி
5. மஹா சிவராத்திரி

இதில் மஹா சிவராத்திரி சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலமான மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி அன்று வருகிறது. மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.

மஹா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மஹா சிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.

இந்த ஆண்டு, மஹா சிவராத்திரிக்கான உகந்த நாள் பிப்ரவரி 18ஆம் தேதியாகும். அன்று சனிக்கிழமை இரவு 08.02 மணிக்கு தொடங்குகிறது. மறுநாள் பிப்ரவரி 19, ஞாயிறு, மாலை 04:18 மணிக்கு முடிவடையும்.

பிப்ரவரி 18 ஆம் தேதி மஹா சிவராத்திரி விரதத்தைத் தொடங்குபவர்கள் மறுநாள் பிப்ரவரி 19 ஆம் தேதி அதை முடிப்பார்கள். பிப்ரவரி 19 ஆம் தேதி மஹா சிவராத்திரி பாராயணம் காலை 06.59 மணிக்கு தொடங்கி மதியம் 03.24 மணிக்குள் எந்த நேரத்திலும் முடிக்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியன்று சிவாலய ஓட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இது தென்னிந்தியாவில் மிகவும் பாரம்பரியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top