வசந்த நவராத்திரி விரதம் 2023

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வசந்த நவராத்திரி விரதம் பற்றிய பதிவுகள் :

நான்கு நவராத்திரிகளில் வசந்த நவராத்திரி விரதம் நேற்று முதல் தொடங்குகிறது.
முழுமையான ஒரு ஆண்டு ஆறு ருதுத்துக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆறு காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முதலாவதாக வருவது வசந்தம் என்னும் ருது. இது இளவேனிற் காலமாகும்.

இது மிகவும் சிறப்புப் பெற்ற காலமாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ருதுக்களில் நான் வசந்த ருதுவாக இருக்கிறேன் எனக் கூறுகிறார். இந்த வசந்த ருதுவான இளவேனிற் காலம் பங்குனி அமாவாசைக்கு மறுநாள் முதல் தொடங்குகிறது.

அப்படிப்பட்ட சிறப்பான நாள் நேற்று முதல் தொடங்கியது. நேற்றிலிருந்து 9 இரவுகள் அம்பிகையை வழிபாடு செய்யச் சிறந்த காலமாகும். இதுவே வசந்த நவராத்திரி என அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வித்யா சாஸ்திரம் நான்கு நவராத்திரிகள் கொண்டாட வேண்டும் எனக் கூறுகிறது. தேவி நவராத்திரி, வராகி நவராத்திரி, சரந் நவராத்திரி, சியாமளா நவராத்திரி என நான்கு நவராத்திரி உள்ளன.

அனைவரும் பொதுவாகக் கொண்டாடும் நவராத்திரி சரந் நவராத்திரி ஆகும். இது ஐப்பசி மாதத்தில் வரும். ஆனால் ஸ்ரீ வித்யா மார்க்கத்தில் ஈடுபட்டு நாவாவரணும் போன்ற பூஜைகளைச் செய்பவர்கள் இந்த நான்கு நவராத்திரிகளையும் கொண்டாட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த நான்கு நவராத்திரிகளையும் கொண்டாடுபவர்கள் அம்மனை போற்றி விசேஷ பூஜைகள் செய்து கொண்டாடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

சுக்லபட்ச பிரதமை தினமான நேற்று முதல் 8 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவராத்திரி என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த நவராத்திரி தினத்தில் தினசரி அம்மனை போதித்து விசேஷ பூஜைகள் செய்து கன்னிகா பூஜைகள் நடத்திக் கொண்டாடலாம்.

பொதுவாக இது போன்ற நவராத்திரி பூஜைகளில் பெண்களே விசேஷமாகக் கொண்டாடுவார்கள். ஏனென்றால் இது கடுமையான விரதம் கடுமையான பூஜை மேற்கொண்டு செய்யக்கூடிய தெய்வ காரியமாகும். அதனால் பெண்கள் இதில் ஈடுபட்டு தங்களது குடும்ப நன்மைக்காக விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த வசந்த நவராத்திரி பூஜை ஹோமம் செய்து அல்லது லலிதா சகஸ்ரநாமம் போன்ற பூஜைகள் செய்து அம்மனை வழிபடலாம். முடியாதவர்கள் தினமும் விரதம் இருந்து அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து பின்பற்றலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top