தாம்பூலம் தானம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தாம்பூலம் தானம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய பதிவுகள் :

களத்திர, மாங்கல்ய தோஷம் பெற்றவர்களும், செவ்வாய் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்களும், கன்னி பெண்கள் சிறந்த கணவரை அடையவும் தாம்பூல தானம் செய்யலாம்.

வெற்றிலையும் பாக்கும் இணைந்ததே தாம்பூலம் ஆகும். வெற்றிலையில் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என மூன்று தேவியும் இருப்பதால் அதை தானம் செய்வோருக்கு பல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது. என்ன தானம் செய்தாலும் அந்த தானத்துடன் தாம்பூலமும் இணைத்து கொடுப்பது உத்தம பலனை தரும்.

வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால் கட்டாயம் தாம்பூலம் கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் குங்குமமாவது கொடுக்க வேண்டும். வெற்றிலை காமதேனுவின் அம்சம். அதனால் தான் இன்றும் நிச்சயதார்த்த நிகழ்வின் போது வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர்.

தெய்வத்தை ஆதாரமாகக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது பெரும் பாவத்தைத் தேடித் தரும். எல்லா தெய்வ பூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்கு வெற்றிலை பாக்கு மிகவும் அவசியம்.

சுமங்கலிகள் செய்யக்கூடிய தாம்பூல தானமானது லக்ஷ்மி தேவியை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்றாகும்.

வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு, தேங்காய், பழம், பூ, மருதாணி, கண்மை, தட்சணை, வஸ்திரம் முதலானவை சுமங்கலி தானம் செய்யக் கூடிய முக்கியமான மங்கள பொருட்கள் ஆகும்.

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது.

1. மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு சுமங்கலித் தன்மையை தரும்.

2. சீப்பு கணவனின் ஆயுளை விருத்தி தரும்.

3. கண்ணாடி கணவனிற்கு ஆரோக்கியம் உண்டாக்கும்.

4. வளையல் மனம் அமைதியும் பொறுமையும் தரும்.

5. தேங்காய் பாவம் நீங்கும் (மட்டைத் தேங்காய் சிறப்பு).

6. பழம் அன்னதானப் பலன் கிடைக்கும்.

7. பூ மகிழ்ச்சி பெருகும்.

8. மருதாணி நோயிலிருந்து காக்கும், சுபகாரியம் தடையின்றி நடக்கும்.

9. கண்மை திருஷ்டி தோஷங்கள் நெருங்காது.

10. இரட்டை வஸ்திரம் புண்ணியம் சேர்வதுடன் தானப்பலன் விரைவாக நிறைவுறும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top