திருமயிலாடி காசி விஸ்வநாதர் ஆலயம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருமயிலாடி காசி விஸ்வநாதர் ஆலயம் பற்றிய பதிவுகள் :

இங்கே எங்கும் இல்லாத அளவுக்கு வடக்கு நோக்கிய வடிவேல் குமரன் நிஷ்டையில் தனிமையில் அமர்ந்து காட்சி தருவது மிகவும் சிறப்பாகும்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமயிலாடி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும். 

இங்கு பார்வதிதேவி சிவபெருமானுக்கு அழகிய மயில் வடிவில் காட்சி தந்தபோது, சிவபெருமானும் அழகிய கோலத்தில் காட்சி கொடுத்ததால் இந்த ஊருக்குத் திருமயிலாடி என்ற பெயரும், சிவபெருமானுக்கு, 'சுந்தரேஸ்வரர்' என்ற திருநாமமும் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இங்கே எங்கும் இல்லாத அளவுக்கு வடக்கு நோக்கிய வடிவேல் குமரன் நிஷ்டையில் தனிமையில் அமர்ந்து காட்சி தருவது மிகவும் சிறப்பாகும். மேலும் இந்த ஆலய பிராகாரத்தில் பிரம்மா அழகுற காட்சித்  தருவதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இதனால் ஏராளமான  பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு உள்ளிட்ட நாள்களில் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். பல தோஷங்கள் போக்கும் கோயிலாகவும் விளங்குகின்றது.

இந்தக் கோயிலின் விமானம் எண் கோணத்தில் அமைந்திருப்பது மேலும் சிறப்பாகும். இப்படி இக்கோயில் அனைத்து வகைகளிலும் பெருமை வாய்ந்ததாகச் சொல்லபடும் நிலையில், மேலும் கூடுதலாக இங்கே காசி விஸ்வநாதருக்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது. அதில் காசி விஸ்வநாதருக்கு பக்கத்திலேயே சனி பகவான் அமர்ந்து அருள்புரிகிறார். 

இங்கு வந்து ஈசனை வழிபட்டால் சனி தோஷம் உள்ளவர்கள், ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள்  தோஷங்களில் இருந்து விடுபடுவர் என்றும், திருமணத்தடை, கல்வி தடை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் தடைகளும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால். சனிக்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top