முருகனுக்கு உகந்தது முல்லை மலர். அழகு என்ற சொல்லுக்கு உரிய முருகனை வழிபடுவது நமக்கு நன்மையை அளிக்கும்.
முருகனை வணங்கினால் வெற்றி மேல் வெற்றி கிட்டும் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது.
சீதை, இராவணனால் கடத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு ஆஞ்சநேயர் சென்று சீதையை கண்டுபிடித்து பார்த்து விட்டு வரும் வழியில் இலங்கையில் இருந்த முருகன் கோயிலுக்கு சென்று வணங்கினார்.
பேச்சு திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கிய பிறகுதான் சொல்லின் செல்வன் என்று ஸ்ரீராமரால் ஸ்ரீஅனுமன் அழைக்கப்பட்டார்.
முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால், நம்முடைய கஷ்டத்தை அந்த முருகப்பெருமானே சுமப்பார். வாழ்வில் ஒருமுறையாவது முருகப்பெருமானுக்கு காவடி எடுத்தால் இந்த பிறவியில் நாம் பெரும் பாக்கியசாலி ஆவோம். முருகப்பெருமானுக்கு முல்லை மலர்களை அணிவித்து வணங்கினால் மிகவும் விசேஷமானது.
முல்லை மலர் அணிவித்து வணங்குவதால் அனைத்து வளங்களும் இறைவனான முருகன் நமக்கு அருளுவர். ஆடி கிருத்திகை அன்று, முருகப்பெருமானுக்கு உகந்த ஆறுபடை வீடுகளில் ஒன்றை தரிசித்தால் நலம் உண்டாகும் அல்லது உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முருகப்பெருமானின் திருக்கோயிலுக்கு சென்று முல்லை மலர்களை தந்து வணங்கினால் எல்லா நலமும் வளமும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
பேச்சாற்றல் குறைவாக உள்ள குழந்தைகள் முருகனை வணங்கினால் பேச்சுதிறன் கூடும். நாம் அனைவரும் முருகப்பெருமானை வணங்கினால் நலங்களும் வளங்களும் பல பெற்று வளமோடும், நலமோடும் கந்தன் அருளால் வாழலாம்.