சனியால் ஏற்படும் பாதிப்பை போக்கும் கருப்பு மஞ்சள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சனியால் ஏற்படும் பாதிப்பை போக்கும் கருப்பு மஞ்சள் பற்றிய பதிவுகள் :

கருப்பு மஞ்சளை பைகளில் வைத்திருந்தால் வெற்றியை தேடித்தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வராத பணமும் கைக்கு வரும். ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருப்பு மஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும். ஜன வசியம், பணவசியத்திற்கு ஏற்றது கருப்பு மஞ்சள்.

கணவன் மனைவி பிரச்சினை

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி சதா சண்டை சச்சரவுடனே இருப்பார்கள். வீட்டிற்குள் நுழைந்தாலே போர்க்களமாகத்தான் இருக்கும். அவர்கள் கருப்பு மஞ்சளை வீட்டின் பூஜையறையில் வைத்து பூஜை செய்து வந்தால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

எதிர்மறை சக்திகள் ஓடும்

கருப்பு மஞ்சள் காளி, பைரவர் உபாசனைக்கு பயன்படுத்தப்படுகிறது. செய்வினை கோளாறுகளை நீக்கும். எதிர்மறை சக்திகளை ஓட வைக்கும். வெற்றியைத் தேடித்தரும். ஜன வசியம், பணவசியம் செய்யக்கூடியது.

தோஷம் போக்கும் கருப்பு மஞ்சள்

ஏழரை சனி, அஷ்டமத்து சனியால் ஏற்படும் பாதிப்புகள், ராகுவினால் ஏற்படும் தோஷத்தையும் போக்கக் கூடியது. பணம் வாங்க வேண்டும், லோன் சம்பந்தமாக பேச வேண்டும் என்று வெளியில் போனாலும் இதை பாக்கெட்டில் எடுத்து போனால் பணம் கிடைக்கும். வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடங்கள், ஹேண்ட்பேக், பணப்பெட்டி பீரோவில் வைக்கலாம்.

வெற்றி தேடி வரும்

ஜாதகத்தில் ராகு திசை, குரு திசை நடப்பவர்களுக்கும் கோச்சார ரீதியாக சனி, ராகு, குரு பலவீனமாக இருந்தால் தினசரி கருப்பு மஞ்சளை வைத்து வர பாதிப்புகள் குறையும். நன்மைகள் பெருகும். இமயமலை மற்றும் இந்தோனேசியாவில் இது அதிகம் விளையக்கூடியது. பல நோய்களை குணப்படுத்தக்கூடியது. கருமஞ்சள் சிறிதளவு எடுத்து சிவப்பு துணியில் கட்டி கழுத்தில் தாயத்து போல அணிய எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும்.

செய்வினை கோளாறுகள் போகும்

கருப்பு மஞ்சளை ஒன்பது துண்டுகளாக சிறிது சிறிதாக வெட்டி அதை பிரேஸ்லெட் போல கோர்த்து கைகளில் அணிந்து கொள்ளலாம். எதிர்மறை சக்திகள் ஓடிப்போகும். பேய் பிசாசுகள் பாதிப்புகள் இருந்தாலும் அந்த பாதிப்புகள் மறைந்து போகும் பணவரவு அதிகரிக்கும் உடல் நல பாதிப்புகள் சரியாகும்.

வேலை கிடைக்கும்

புது வேலைக்கு செல்பவர்கள் கருப்பு மஞ்சளை நெற்றியில் திலகமாக வைத்துக் கொண்டு சென்றால் அது வெற்றிகரமாக முடியும். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கண் திருஷ்டி கோளாறுகள் இருந்தாலும் குணமடையும். தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டாலோ, உடல் நல பாதிப்புகள் வந்தாலோ இந்த கருப்பு மஞ்சள் நஷ்டத்தை போக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top