பொதுவாக அவதாரம் எடுப்பது என்பது கடவுள் பூமியில் தீமைகள் அதிகரிக்கும் போது அவைகளை அழித்து மக்களை காப்பாற்றுவதற்காக மனிதனாக பிறப்பெடுப்பது என்பதாகும்.
சிவபெருமானின் எடுத்துள்ள அவதாரங்கள் பற்றி 16ஆம் நூற்றாண்டில் அதிவீரராம பாண்டியனால் எழுதப்பட்ட கூர்ம புராணம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மொழியில் இருந்த பாயிரத்தை தமிழில் இவர் மொழி பெயர்த்ததாகக் கூறப்படுகிறது. கூர்ம அவதாரம் எடுத்த விஷ்ணு பெருமான் சிவ பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்ததாக இது சொல்லப்படுகிறது.
இந்த புரானமானது இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று, பூர்வகாண்டம். மற்றொன்று உத்தர காண்டம். பூர்வ காண்டமானது 48 அத்தியாயங்களாக 2729 பாடல்கள் உள்ளது. உத்தர காண்டமானது 47 அத்தியாயங்களாக 899 பாடல்கள் உள்ளது.
சிவபெருமானின் அவதாரங்கள் அதில் 27 என சொல்லப்படுகிறது.
1. ஸ்வேதா
2. சுதாரா
3. மதனன்
4. சுஹோத்திரன்
5. கங்கணன்
6. லோகாக்ஷி
7. ஜெய் கிஷ்ஹவ்யன்
8. தாதிவாகன்
9. ரிஷபன்
10. பிருகு
11. உக்கிரன்
12. அத்திரி
13. கவுதமன்
14. வேதசீர்ஷன்
15. கோகர்ணன்
16. ஷிகந்தகன்
17. ஜடமாலி
18. அட்டஹாசன்
19. தாருகன்
20. லங்காலி
21. மகாயாமன்
22. முனி
23. ஷுலி
24. பிண்ட முனீச்வரன்
25. ஸஹிஷ்ணு
26. ஸோமசர்மா
27. நகுலீஸ்வரன்
மேலும் 19 அவதாரங்கள் உள்ளன என்றும் பலரால் சொல்லப்படுகிறது.
1 – பிப்லாட் அவதாரம்
2 – நந்தி அவதாரம்
3 – வீரபத்திர அவதாரம்
4 – பைரவ அவதாரம்
5 – அஸ்வத்ஹமா
6 – ஷரபா அவதாரம்
7 – க்ரஹபதி அவதாரம்
8 – துர்வாசா
9 – அனுமான்
10 – ரிஷப அவதாரம்
11 – யாதிநாத் அவதாரம்
12 – கிருஷ்ண தர்ஷன் அவதாரம்
13 – பிக்ஷுவர்யா அவதாரம்
14 – சுரேஷ்வர் அவதாரம்
15 – கீரத் அவதாரம்
16 – சுண்டன்டர்கா அவதாரம்
17 – பிரமச்சாரி அவதாரம்
18 – யக்சேஷ்வர் அவதாரம்
19 – அவதுட் அவதாரம்