சிவபெருமானை நாம் பல விதமாக வணங்கலாம். அதிலும் விரதமிருந்து வழிபடுவது சிறந்தது. விரதமிருந்து வழிபடுவது நற்பலனை தரும். எந்த நாள் எந்த விரத்தினை கடைப்பிடிப்பது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.
விரதங்கள் :
சோமவார விரதம் :
திங்கள் கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது விரதமாகும்.
உமா மகேஸ்வர விரதம் :
கார்த்திகை பவுர்ணமியில் அன்னம் உண்ணாமல் விரதமிருப்பது உமா மகேஸ்வர விரதமாகும்.
திருவாதிரை விரதம் :
மார்கழி மாதத்தில் இறைவனை எண்ணி விரதமிருப்பது ஆகும்.
சிவராத்திரி விரதம் :
மாசி மாதம் அமாவாசை தினத்தில் சிவனின் அருளை பெற உண்ணாமல் இறைவனின் புகழைப் பாடி வணங்குவதாகும்.
கல்யாண விரதம் :
பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து கடவுளுக்கு படையலிட்டு வணங்குவது கல்யாண விரதமாகும்.
பாசுபத விரதம் :
தைப்பூச தினத்தில் விரதம் இருப்பது பாசுபத விரதமாகும்.
அஷ்டமி விரதம் :
வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ;டமி தினத்தில் இறைவனை அனுஷ;டிப்பதாகும்.
கேதார கவுரி விரதம் :
ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம் கேதார கவுரி விரதமாகும்.