அருள்மிகு குமரன் குன்றம் முருகன் கோயில்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அருள்மிகு குமரன் குன்றம் முருகன் கோயில் பற்றிய பதிவுகள் :

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரேம்பேட்டைக்கு அருகே உள்ள முருகன் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தின் மூலவர் சுவாமிநாதசுவாமி (பாலசுப்ரமணியர்).

ஐஸ்வரய முருகன்:

மூலஸ்தானத்தில் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பால வடிவில் காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சன்னதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். ஆடி தைகிருத்திகை, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுவாமிமலையை கிரிவலம் வருகிறார்.

தல சிறப்பு:

குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் தலம் "குமரன் குன்றம்" என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதப் பிறப்பின்போது இங்குள்ள 120 படிகளுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளுவார்.

தல வரலாறு:

பல்லாண்டுகளுக்கு முன்பு இத்தலத்தில் குன்று மட்டும் இருந்தது. ஒருசமயம் இவ்வூருக்கு வந்த காஞ்சிப்பெரியவர், இம்மலையைப் பார்த்து பிற்காலத்தில் இங்கு முருகன் கோவில் உண்டாகும் எனச் சொல்லிச்சென்றுவிட்டார். சிலகாலம் கழித்து பக்தர்கள் சிலர், இம்மலையை சீர்படுத்தினர். அப்போது குன்றில் ஒரு வேல் கிடைத்தது. அதை இங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின்பு முருகனுக்கு தனிக்கோவில் கட்டப்பட்டது. மூலவருக்கு சுவாமிநாதன் என்று பெயர் சூட்டப்பட்டது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top