பங்குனி உத்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பங்குனி உத்திரம் பற்றிய சிறப்பு பதிவுகள் :

பௌர்ணமியோடு சேர்த்து உத்திர நட்சத்திரமும் சில நாழிகை வருவதால் ஏப்ரல் 5-ம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடுவதே சிறப்பு. 

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. தெய்வீக திருமணங்கள் நிறைந்த பங்குனி தமிழ் மாதங்களில் கடைசி மாதம்., இந்த பங்குனி மாதம் நமக்கு மங்காத புகழையும், செல்வத்தையும் தந்தருளும்.

பார்வதி – பரமேஸ்வரன், மீனாட்சி – சுந்தரேஸ்வரர், ஆண்டாள் – ரங்கமன்னார், ஸ்ரீமத் லலிதா திரிபுரசுந்தரி காமேஸ்வரர் திருக்கல்யாணம், தெய்வானை – முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான். நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குருவின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. 

அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனை வரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது. இதனை மெய்ப்பிக் கும் விதமாக ஞானகுரு வாகிய ஐயப்பன் உதித்ததும் இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் தான்.

சாமானிய மனிதர்களாகிய நமக்கு மட்டுமல்ல, சிவனேசச் செல்வர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் இறைவன் காட்சியளித்து மெய்ஞ்ஞானத்தைப் போதிப்பதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான். 

சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று இறைவனை வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top