வாழ்வில் வெற்றி அளிக்கும் வாராஹி அம்மன் வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாழ்வில் வெற்றி அளிக்கும் வாராஹி அம்மன் வழிபாடு பற்றிய பதிவுகள் :

ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும்.

எட்டு திசை அதிபர்களின் ஆயுதங்களில் உறைந்திருப்பவள் இந்த  வாராகி. நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற வாராஹியை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும்.

நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து வழிபட என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்பவர்கள்.

கடன் தொல்லை அகலுவதற்கும் சொத்துக்கள் மீதான வழக்கில் சிக்கித் தவிப்பவர்களும் இழந்த செல்வங்களை நினைத்து கதறுபவர்களும் வழிபட இழந்ததெல்லாம் கிடைக்கும். கடனையெல்லாம் அடைப்பீர்கள். சொத்துப் பிரச்சினையில் ஜெயம் உண்டாகும்.

மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள், எதற்கு எடுத்தாலும் பயந்து வருந்துபவர்கள் வழிபடுவது நல்ல நல்ல பலன்களை வழங்கும்.

புதிதாக வீடு கட்டுவதில் தடைபட்டால் வராஹி வழிபாடு தடைகளை நீக்கும்.

வஸ்திர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி. பக்தர்கள் வஸ்த்ர தானம் செய்து வாராஹியை வழிபட வேண்டும். வஸ்திர தானம் வராஹி அதிக சந்தோஷத்தை அடைவாய்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top