நவகிரங்களில் ஒன்றான சுக்கிர பகவான்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவகிரங்களில் ஒன்றான சுக்கிர பகவான் பற்றிய பதிவுகள் :

நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். இவருக்கு பார்க்கவன் என்ற பெயர் உண்டு. 

சுக்கிரன் மிகச்சிறந்த சிவ பக்தர். இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண்தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார். முதலை வாகனமும் உண்டு.

சுக்கிரனின் வேறு பெயர்கள்:

• அசுமந்திரி, 
• உசனன், 
• பார்க்கவன், 
• சுங்கன், 
• வெள்ளி, 
• பளிங்கு, 
• புகர், 
• கவி, 
• மழைக்கோள், 
• பிரகு, 
• பண்டிதன்,
• காவியன், 
• நந்தனன், 
• காமராஜன், 
• போகி, 
• அழகோன், 
• சுந்தரன்.

சுக்கிரன் தரும் யோகங்கள் :

1. மாளவியா யோகம் :

சுக்கிரன் என்றால் இன்பம் என்று பொருள் கொள்ளலாம். சுக்கிரன் ஆட்சியோ, உச்சமோ பெற்று இருந்தால் நீண்ட ஆயுள், வீடு, மனை, பூமி சேர்க்கை குடும்பத்திற்கு தேவையான அதிநவீன பொருட்களின் சேர்க்கை, செல்வம், செல்வாக்கு சேரும் நிலை, சந்தோஷமான வாழ்க்கை போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

2. லட்சுமியோகம் :
 
சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சியோ, உச்சமோ பெற்று சஞ்சரிக்கும்போது புகழ் பெருமை செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய யோகம் உண்டாகும்.

3. பிருகு மங்கள யோகம் :
 
சுக்கிரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமையப் பெறுவது. இதனால் வீட்டு மனை, வண்டி, வாகனம், ஆடை, ஆபரணம் போன்ற யாவும் சேரும்.

வழிபாடு :
 
பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நலம் பயக்கும். மாலையில் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். 

மேலும் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். 
 
சுக்கிர ஷேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. இங்கு சென்று, தேவியருடன் அருள் பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்கள் ஒன்று கூடுவார்கள். சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top