நாம் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு செல்லும் போது பிரார்த்தனையை முடித்துவிட்டு கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வருகிறோம்.
ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று அர்த்தம்.
மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.
ஐந்து முறை வலம் வந்தால் இஷ்டசித்தி கிடைக்கும்.
ஏழு முறை வலம் வந்தால் காரிய வெற்றி உண்டாகும்.
ஒன்பது முறை வலம் வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும்.
பதினொரு முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
பதினைந்து முறை வலம் வந்தால் தன லாபம் உண்டாகும்.
பதினேழு முறை வலம் வந்தால் தானியம் சேரும்.
பத்தொன்பது முறை வலம் வருவதால் பிணிகள் நீங்கும்.
இருப்பத்தொரு முறை வலம் வருவதால் கல்வி விருத்தியாகும்.
இருபத்தி மூன்று முறை வலம் வந்தால் சுக வாழ்வு கிட்டும்.
நூற்றியெட்டு முறை வலம் வந்தால் புத்திர பேறு கிடைக்கும்.
இருநூற்றுயெட்டு முறைவலம் வந்தால் யாகம் செய்த பலன் உண்டாகும்.