தானங்களும் அவற்றின் பலன்களும்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :

நாம் பிறருக்கு தானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்களும் அவற்றுள் முக்கியமானவைகளும்,

ஆடை தானம் :

ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நன்று.

வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.

தேன் தானம் :

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று (இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

நெய் தானம் :

பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6, 8, 12ஆம் அதிபதியின் திசை), நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகலவிதமான நோய்களும் தீரும்.

தீப தானம் :

இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். ஏழைகள், பிராமணர்கள் அல்லது கோவில்களுக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

அரிசி தானம் :

பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.

கம்பளி - பருத்தி தானம் :

வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ;டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்தி உடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

வஸ்திர தானம் :

ஆயுளை விருத்தி செய்யும்.

பூமி தானம் :

பிரமலோகத்தையும், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.

தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.

நெய், எண்ணைய் தானம் - நோய் தீர்க்கும்.

தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.

வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.

நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.

பால் தானம் - துக்கம் நீங்கும்.

தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.

தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.

பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top