ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் பெருமைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீலலிதா சகஸ்ர நாமம் பெருமைகள் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு நாமம் இருக்கும். அந்த நாமத்தை சொல்லி வழிபட்டால் நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். அப்படி சிறப்பு வாய்ந்த நாமங்களில் அன்னை லலிதாம்பிக்கையின் லலிதா சகஸ்ர நாமம் மிக விஷேமான நாமமாகும். இந்த நாமத்தை சொல்லி அன்னையை வழிபட பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்து இருக்கும்.

நாமாவளியால் அர்ச்சனை செய்யும் போது ஒவ்வொன்றிற்கும் ஓம் என்று மட்டும் சொல்வது சரியாக அமையாது. ஒவ்வொரு நாமாவளிக்கும் முன்பு ஓம் - ஐம் - ரீம் ஸ்ரீமாத்ரே நமஹ; என்று முறைப்படி சொல்லி செய்தால்தான் பூரண பலன் உண்டு. ஏனெனில், ரீம், பீஜம் என்பது பெண் தெய்வங்களுக்கு உரிய சக்திப்ரணவம் என்று கருதப்படுகிறது.

ஆபால கோபால விதி தாயே நமஹ; என்ற நாமாவளி, இந்த அன்புத்தாயை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள் யாவரும் எப்போதும் வழிபட்டு அருள் பெறலாம் என்று கூறுகிறது. 

எல்லா தெய்வங்களும் அருள்பாலித்தாலும் சுமங்கலிகள் அம்பாளை ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மூலம் தொடர்ந்து வழிபட்டால் எந்த ஆபத்தும் வராது என்று நாமாவளி உணர்த்துகிறது.

அனைத்து உயிர்களுக்கும் தாயாக விளங்கும் பெரும் சக்தியான, பெண் தெய்வமான தேவி பராசக்தியை தேவி மகாத்மியத்தில் தேவர்கள் வழிபடுவதை ஒரு ஸ்லோகம் இப்படி குறிப்பிடுகிறது. 

யாதேவி ஸர்வ பூதே
மாத்ரு ரூபேன ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நமஹ

இந்த நாமம் சொல்லி அர்ச்சிப்பதால் எந்த ஒரு தீமையும் நம்மிடையே நெருங்காது. அன்னையை போற்றி ஆயுளை நீடிக்க இந்த நாமத்தை தினந்தோறும் சொல்லி வழிபடுவோம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top