மூன்றாம் பிறை தரிசனம் முக்கண்ணன் தரிசனம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மூன்றாம் பிறை தரிசனம் முக்கண்ணன் தரிசனம் பற்றிய பதிவுகள் :

மூன்றாம் பிறை தரிசனம் தினசரி காலாண்டரிலும், பஞ்சாங்கத்திலும் சந்திரபிறை தரிசனம் என்று குறிப்பிட்டிருக்கும். அந்த நாளில் வான வீதியில் சில நிமிடங்களே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி சந்திர மௌலீஸ்வரராக காட்சி தருகின்றார். 

எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்லது அந்த சிவபெருமானின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம். இந்த சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம் ஸ்ரீசந்திர மௌலீஸ்வராய நம! அல்லது ஸ்ரீசந்திர மௌலீஸ்வரா போற்றி; என்ற இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். 

அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது. செல்வவளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

மூன்றாம் பிறை தரிசன நாளன்று ஒரு விஷேசமான தலத்தில் இருந்து மூன்றாம் பிறை தரிசனத்தையும், ஆலய மூலவரையும் வழிப்பட்டால் புண்ணியத்தையும், பலனையும் இரு மடங்காக பெறலாம். அந்த ஸ்தலம் தான் அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில். 

இந்த ஆலயம் வேலூரிலிருந்து (20 கி.மீ) சென்னை செல்லும் வழியில் உள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. தூரம் சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். அங்கு இரண்டு பெருமாள் கோயில் இருப்பதால் அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லலாம். 

தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய சந்திரனுக்குரிய நட்சத்திர நாளிலோ மற்றும் மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால், கல்வி அறிவு வளரும். 

திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு வழிபாடு செய்து தங்களது குறைகள் நீங்கி வளமும், நலமும் பெறலாம். 

சந்திரன் ஸ்லோகம்: 

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி திருவருள் தருவாய்

சந்திரா போற்றி சற்குணா போற்றி

சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி 

மேற்கூறிய ஸ்லோகத்தையும் மனதில் தியானித்துக் கொண்டு மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டு இப்பிறவியில் உள்ள பிறவிக் கடனை கடப்போம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top