வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம் பற்றிய பதிவுகள் :

விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும்.

விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சி தருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை - விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள் - பூத வடிவமாகும். புருவம், கண்கள் - மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் - தேவ வடிவமாகும்.

சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.

ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல் மிகவும் நல்லது.

சதுர்த்தி திதியில் ஜாதகத்தில் திருமண தடை உள்ள பெண்கள் இவ்விரதம் கடைபிடித்தால் தடை விலகி நல்ல வரன் தேடி வந்து அமையும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top