பிறந்த கரண பலன்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிறந்த கரண பலன்கள் பற்றிய பதிவுகள் :

நித்ய வாழ்வில் கரணம் தப்பினால் மரணம் என்று வழங்குகிறது. கிரக சுழற்சியின்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் ஏற்படும் தூரம் திதி எனப்படும். அதில் பாதிதான் கரணம் ஆகும். வடமொழியில் இச்சொல்லுக்கு ஒரு தினத்தில் பாதி என்று பொருள்படும்.

 ஒரு திதியின் இரண்டாவது கரண முடிவு மறு திதியின் ஆரம்பம் ஆகும், பஞ்சாங்கத்தில் காட்டியிருப்பது ஒரு திதியின் வியாபக காலம் ஆக இருந்தபோதிலும், வழக்கத்தில் அன்றைய திதி வியாபகம் ஆகும் கரணத்தை மட்டுமே காட்டியிருக்கிறது.

சூரிய உதயத்திலிருந்து 30 நாழிகை அல்லது அதற்குக் குறைவான நாழிகை வியாபகமாக அமைகிறதே, அதனை அன்றைய கரணமாகப் பாவித்து அறிதல் வேண்டும். மிகவும் துல்லியமாக கணிதம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அதன் நுட்பத்தை உணர்த்தவே இது போல் பழமொழி வந்தது.

1. பவம் - மன உறுதி, மகிழ்ச்சி, செல்வம் சேரும். ஜோதிட ஆராய்ச்சி, அரச செல்வம், புத்திமான், அழகிய வதனம்.

2. பாலவம் - செல்வந்தன், மகிழ்ச்சி, கடமையில் தவறுபவன், அழகன், கொடைவள்ளல், தான் எனும் ஆணவமுள்ளவன்.

3. கௌரவம் - அரச செல்வாக்கு, மாதா பிதா விசுவாசி, தர்ம சிந்தனை உடையவன்.

4. தைத்துலை - அமைச்சன், தனவந்தன், கருமி, பெண்பிரியர், சுயநலவாதி.

5. கரசை - நன்னடத்தையற்றவர், அரசு ஊழியர், பெண் நேசன்.

6. வசரிசை - கெட்ட எண்ணம், கஞ்சன், அவசரக் குடுக்கை.

7. பத்தரை - கொடிய தோற்றம், இழிந்த குணம், விதரணையற்றவன்.

8. சகுனி - அகந்தை உடையவன், தனவந்தர், அழகிய தேகன், புத்திசாலி.

9. சதுஷ்பாதம் - சொல்லில் உறுதி இல்லாதவன், வேசி நேசன், கலகப் பிரியன், மோசவாதி.

10. நாகவம் - அங்கத்தில் குறை, கோழை, பெண்பித்தன், நாவுக்கடிமையானவன்.

11. கிஷ்துக்னம் - சண்டைப் பிரியன், பெற்றோர் நேசன், வேசி நேசன், பிறரால் பாதிக்கப்படுவான்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top