நினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நினைத்த காரியம் வெற்றி பெற வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றிய பதிவுகள் :

நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், முதலில் தங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். 

அந்த இலக்கில் நேர்மறை எண்ணங்களும், நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், கடவுளை வணங்கி ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுடன் அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும்.

காரிய வெற்றிக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள் :

செல்வம் சேர வேண்டுமெனில் : ஸ்ரீமகாலட்சுமி நாராயணரை வாழிபாடு செய்யலாம்.

ஆயுள் ஆரோக்கியம் பெற ருத்திரனை வழிபாடு செய்யலாம்.

மனவலிமை, உடல் வலிமை பெற : ராஜராஜேஸ்வரி, ஆஞ்சநேயரை வழிபடலாம்.

கல்வியில் சிறந்து விளங்க : ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபாடு செய்யலாம்.

திருமணம் நடைபெற : ஸ்ரீகாமாட்சி அம்மனையும், துர்க்கையையும் வழிபடலாம்.

மாங்கல்யம் நிலைக்க : மங்கள கவுரி

புத்திர பாக்கியத்தை பெற : சந்தான லட்சுமி, சந்தான கிருஷ்ணனை வழிபடலாம்.

விவசாயம் தழைக்க : ஸ்ரீதான்யலட்சுமி வழிபாடு செய்யலாம்.

சாப்பாட்டு கஷ்டம் நீங்க : ஸ்ரீஅன்னபூரணியை வழிபடலாம்.

பகைவர் தொல்லை நீங்க : திருச்செந்தூர் முருகன் வழிபாடு நல்லது.

திருஷ்டி விலக : முத்துமாரியை வழிபடலாம்.

வழக்குகளில் வெற்றி பெற : விநாயகர் வழிபாடு நல்லது.

புதிய தொழில் துவங்க வேண்டுமெனில் : ஸ்ரீகஜலட்சுமி வழிபாடு செய்யலாம்.

நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும் என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top