ஸ்ரீ மஹாவாராஹி நவராத்திரி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீமஹாவாராஹி நவராத்திரி பதிவுகள் :

அன்னை ஸ்ரீ மஹாவாராஹி ஸ்ரீலலிதையின் பஞ்சபுஷ்பபாணங்களில் இருந்து தோன்றியவள். இவளே ஸ்ரீலலிதையின் படைத்தலைவி (சேனாதிபதி). ஸ்ரீவாராஹி உபாசனை சிறந்த வாக்குவன்மை, தைரியம், தருவதோடு எதிர்ப்புகள், எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும். அபிச்சாரம் எனப்படும் பில்லி, சூனியம், ஏவல்களை நீக்குவாள். இவளை வழிபடுபவர்கள் எந்த மந்திரவாதிக்கும் அஞ்சத் தேவையில்லை.ஏதிரிகளின் வாக்கை, அவர்கள் செய்யும் தீவினைகளை ஸ்தம்பனம் செய்பவள். வழக்குகளில் வெற்றி தருபவள்.

மந்திர சாஸ்திரபழமொழி :- 

"வாராஹிக்காரனோடு வாதாடாதே". 

ஸ்ரீவாராஹி வாக்கு சித்தி அருள்வதில் முதன்மையானவள். எனவே இவளை உபாசிப்பவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது அவை உடனே பலிக்கும். ஆனால் அதனால் பாதிப்படைந்தவரின் வேதனைக்கான பாவம் விரைவில் நம்மை சேரும். எனவே எவருக்கும் அழிவு வேண்டி வணங்காமல் ''எதிரிகளால் துன்பம் ஏற்படாமல் காக்குமாறு" வேண்டி வழிபட வேண்டும்.

ஸ்ரீவாராஹி எலும்பின் அதிதேவதை இவளை வணங்க எலும்பு தொடர்பான வியாதிகளும், வாத, பித்த வியாதிகளும் தீரும்.

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.

புதன், சனிக்கிழமைகள், அஷ்டமி திதி, பஞ்சமி திதி, நவமி, திருவோண நட்சத்திரம் அன்றும் வழிபடலாம். எல்லா மாதங்களிலும் வரும் வளர்பிறை அஷ்டமி அன்று வழிபட சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ஆடி மாதம் வளர்பிறையின் முதல் 10 நாட்கள் இவளின் நவராத்திரி அந்த நாட்களில் தினமும் அவளுக்கு விருப்பமான நைவேத்தியங்களுடன் பூஜிக்க வல்வினைகள் யாவும் தீரும் என்று மந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. செல்வம் , அரசியல் வெற்றி, பதவி, புகழ் வேண்டுவோர் பஞ்சமியிலும், மனவலிமை, ஆளுமை, எதிர்ப்புகளில் வெற்றியடைய அஷ்டமியிலும் சிறப்பாக வழிபடவேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top