குழந்தை வரம் தரும் பத்மினி ஏகாதசி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குழந்தை வரம் தரும் பத்மினி ஏகாதசி பற்றிய பதிவுகள் :

மஹாவிஷ்ணுவின் அருளை பெறுவதற்காக வைணவர்கள் கடைபிடிக்கும் முக்கியமான விரதம் ஏகாதசி விரதமாகும். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகள் வீதம் மொத்தமாக 24 ஏகாதசிகள் வருகின்றன. இதை ஒவ்வொன்றிற்கும் தனியான பெயர், கதை, சிறப்பு பலன்கள் இருக்கின்றன. இதை தெரிந்த கொண்டு முறையாக ஏகாதசி விரதம் இருப்பவர்கள் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெற முடியும்.

ஏகாதசி என்ற சொல்லுக்கு 11 என்று பொருள். அதாவது 11 வதாக வரும் திதி. ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் 5, மனம் ஆகிய 11 ம் இறைவனிடம் ஒன்றச் செய்வதே ஏகாதசி விரதமாகும். இந்த நாளில் இறைவனை மட்டுமே நினைத்து, அவனை துதி பாடி விரதம் இருந்தால் மன கவலைகள், கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம்.

வைணவர்களால் கடைபிடிக்கப்படும் விரதங்களில் மிக முக்கியமானது ஏகாதசி விரதமாகும். ஏகாதசி நாள் என்பது பெருமாள் வழிபாட்டிற்கு உரிய மிக புனிதமான நாளாகும். ஏகாதசி நாளில் விரதம் இருப்பதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

பாவங்கள் நீங்குவதற்கும், திருமாலின் திருவடியை அடைவதற்கும் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி விடும். 

ஏகாதசி விரதத்தை முறையாக தொடர்ந்து கடைபிடிப்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது என பத்ம புராணம், ஸ்கந்த புராணம், விஷ்ணு புராணம், கருட புராணம் உள்ளிட்ட புராணங்கள் சொல்கின்றன.

ஒவ்வொரு மாதத்திற்கும் வரும் ஏகாதசி விரதத்திற்கு ஒரு பெயர் இருப்பது போல் ஸ்ரவண மாதத்தில் வரும் வளர்பிறை (சுக்லபட்சம்) ஏகாதசிக்கு பத்மினி ஏகாதசி என்று பெயர். இந்த ஆண்டு பத்மினி ஏகாதசியானது ஜூலை 29 ம் தேதி வருகிறது. ஏகாதசி திதியானது ஜூலை 28 ம் தேதி காலை 10.26 மணிக்கு துவங்கி, ஜூலை 29 ம் தேதி காலை 09.11 வரை உள்ளது. அதற்கு பிறகு துவாதசி திதி துவங்குகிறது.

பத்மினி ஏகாதசி அன்று ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஜூலை 28 ம் தேதி பகல் பொழுது அல்லது இரவே விரதத்தை துவக்கி விட வேண்டும். இரவு எளிமையான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஜூலை 29 ம் தேதி காலை முதல் உணவு ஏதும் சாப்பிடாமல், வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். பாரணை செய்யும் நேரமாக ஜூலை 30 ம் தேதி காலை 05.41 முதல் 08.23 வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது. துவாதசி திதி ஜூலை 30 ம் தேதி காலை 10.34 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த ஆண்டு வரும் பத்மினி ஏகாதசி மிகவும் விசேஷமானதாகும். காரணம், சிவனுக்குரிய ஸ்ரவண மாதத்தில் பத்மினி ஏகாதசி வருகிறது. அதனால் இது விஷ்ணுவிற்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தை புருஷோத்தம மாதம் என்றும் அழைக்கின்றனர். 

சக்தி வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் சிவன் - விஷ்ணு இருவருக்கும் உரிய வழிபாட்டு மாதங்கள் இணைவதால் இது ஹரி ஹர வழிபாட்டிற்கு உரிய மாதமாகிறது. இதனால் இந்த மாதத்தில் விரதம் இருந்து வழிபட்டால் சிவன், திருமால் இருவரின் அருளையும் பெற முடியும்.

பத்மினி விஷூத் ஏகாதசி என்றும் அழைக்கப்படும். இந்த பத்மினி ஏகாதசி நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வளமான வாழ்க்கை கிடைக்கும். நேரடியாக வைகுண்ட பதவி அடையும் பெரும் பேறு கிடைக்கும். அது மட்டுமின்றி இந்த விரதம் இருப்பவர்களுக்கு ஆன்மிக பலம், ஆரோக்கியம், செல்வ வளம், மகிழ்ச்சி ஆகியன கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த நாளில் விரதம் இருந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதோடு ஆரோக்கியமான குழந்தையையும் பெறுவார்கள்.

பத்மினி ஏகாதசி நாளில் கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் புனித நீராடுவது புண்ணிய பலனை தரும். மேலும் இந்த நாளில் யாகம், ஹோமம் ஆகியவை நடத்தி, இல்லாதவர்களுக்கும், அந்தணர்களுக்கும் உணவு, உடை ஆகியவற்றை தானமாக அளிக்கலாம். இது பாவங்கள் அனைத்திலும் இருந்து நம்மை விடுவிக்கக் கூடியவையாகும்.

பத்மினி ஏகாதசி விரத முறை :

* பத்மினி ஏகாதசியன்று அதிகாலையில் எழுந்து, நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து விரதத்தை துவக்க வேண்டும்.

* வீட்டிலுள்ள பெருமாளின் படத்திற்கு துளசி, வாசனை மலர்கள், மஞ்சள் நிற வஸ்திரம் சாத்தி வழிபடலாம்.

* நெய் விளக்கேற்றி, பஞ்சாமிர்தம், துளசி இலை, பழங்கள் படைத்து வழிபட வேண்டும்.

* மாலையில் துளசி செடிக்கு அருகில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து ஏழு முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

* பத்மினி ஏகாதசி நாளில் துளசியை பறிக்கக் கூடாது. முதல் நாளே துளசியை பறித்து, சுத்தமான தண்ணீரில் போட்டு வைத்து விட வேண்டும்.

* பெருமாளுக்குரிய விஷ்ணு மஹா மந்திரங்கள், விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகிய மந்திரங்களை பாராயணம் செய்வது சிறப்பானது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top