நவகிரக வழிபாடும் பலன்களும்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவகிரக வழிபாடும் பலன்களும் பற்றிய பதிவுகள் :

நம் ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும். யாருக்குமே ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. 

சில கிரகங்கள் பலமாகவும், சில கிரகங்கள் பலவீனமாகவும் அமைந்திருக்கும். கிரக நிலைகள் பலவீனமாக உள்ளவர்கள் எவ்வாறு வழிபட்டால் சிறப்பு என்பதை பார்ப்போம். 

நவகிரகங்களில் ஒன்றான சூரியனுக்கு 10 தீபங்கள் ஏற்றி செந்தாமரை கொண்டு வழிபட வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

சந்திரனுக்கு 10 தீபங்கள் ஏற்றி வெள்ளல்லி கொண்டு வழிபட்டு வந்தால் பதவி உயர்வு மற்றும் புகழ் கிடைக்கும்.

செவ்வாய் பகவானுக்கு 9 தீபங்கள் ஏற்றி செண்பகம் கொண்டு வழிபட்டு வந்தால் வீரமும் தைரியமும் அதிகரிக்கும்.

புதன் பகவானுக்கு 17 தீபங்கள் ஏற்றி வெண்காந்தன் கொண்டு வழிபட்டு வந்தால் நல்ல புத்தியும், சிறந்த அறிவாற்றலும் கிடைக்கும்.

குரு பகவானுக்கு 24 தீபங்கள் ஏற்றி முல்லை கொண்டு வழிபட்டு வந்தால் கை நிறைய செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

சுக்கிரனுக்கு 9 தீபங்கள் ஏற்றி வெண் தாமரை கொண்டு வழிபட்டு வந்தால் நல்ல மனைவி அமையும் மற்றும் வீடு, மனை வாங்கும் யோகம் அதிகரிக்கும்.

சனி பகவானுக்கு 10 தீபங்கள் ஏற்றி கருங்குவளை மலர் கொண்டு வழிபட ஆயுள் அதிகரிக்கும்.

ராகுவிற்கு 21 தீபங்கள் ஏற்றி மந்தாரை மலர் கொண்டு வழிபட்டால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.

கேதுவிற்கு 10 தீபங்கள் ஏற்றி செவ்வல்லி மலர் கொண்டு வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top