திருப்பதி பிரசாதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருப்பதி பிரசாதம் பற்றிய பதிவுகள் :

திருமலை வாசனுக்கு படைக்கும் பிரசாதங்கள் தாய் வகுளாதேவி முன்னிலையில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக மடப்பள்ளி முன்பு தாய் வகுளாதேவி சிலை உள்ளது. 

இங்கு ஏழுமலையானுக்கு பிடித்த லட்டு பிரசாதத்துடன் பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்தரன்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரி பருப்பு கேசரி ஆகியவை பெருமளவு தயார் செய்யப்படுகிறது. 

ஆனால் ஏழுமலையானுக்கு தயிர்சாதம் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதுவும் மண்சட்டியில் வைத்து படைக்கப்படுகிறது. 

இதுதவிர வேறு எந்த பாத்திரமும் கருவறையின் குலசேகரபடியை தாண்டது. 

பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர் சாதமும் ஒரு பக்தனுக்கு கிடைத்தால் அது அவன் செய்த பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top