திருமலை அதிசயம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருமலை அதிசயம் பற்றிய பதிவுகள் :

ஆஜானுபாகுவாய் சுமார் 9 அடிக்கு மேல் உயர்ந்து கமலபீடத்தின் மீது எழுந்து நிற்கும் ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை மட்டுமே அபிஷேகம் நடக்கும். 

மற்ற நாட்களில் எல்லாம் பச்சை கற்பூரம், புனுகுதைலம், வாசனை திரவியங்கள் சாத்தப்பட்டு தங்க, வைர, வைடூரிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. 

மூலவர் "சிலா தோரணம்" என்ற அபூர்வ கற்களில் வடிக்கப்பட்டு உள்ளது. மூலவருக்கு தினமும் பச்சை கற்பூரம் சாத்தப்படுகிறது. இது அரிப்பை ஏற்படுத்தும் ஒருவகை அமிலம். இதனை சாதாரண கருங்கல்லில் தடவினால் அது வெடித்துவிடும். 

ஆனால் 365 நாளும் பச்சை கற்பூரம் சாத்தப்படும் ஏழுமலையான் மூலவர் சிலை வெடிப்பேதும் இல்லாமல் உள்ளது அதிசயமாக கருதப்படுகிறது. 

ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. 

திருமலை 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். 

அபிஷேகம் முடிந்ததும் ஏழுமலையானுக்கு வியர்க்கும். இதனால் பீதாம்பரத்தால் வியர்வையை வேதபண்டிதர்கள் ஒற்றி எடுக்கிறார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top