ஏழுமலையானை தரிசிக்கும் முறைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஏழுமலையானை தரிசிக்கும் முறைகள் பற்றிய பதிவுகள் :

ஏழுமலையானை திருமலை ஏறி நேரடியாக அவரை தரிசிக்க கூடாது. அதற்கு ஒரு மரபு உண்டு. முதலில் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமானை சேவிக்க வேண்டும். 

ஏன் முதலில் கோவிந்தராஜனை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் இவர் வேங்கடவனின் அண்ணன். 

சிதம்பரம் கோவிலில் திருச்சித்திரகூடத்தில் எழுந்தருளி உள்ள கோவிந்தராஜனே இவர் என்று புராண வரலாறு கூறுகிறது. 

தில்லை கோவிந்தராஜன் இந்த பகுதிக்கு வந்ததாகவும், திருப்பதியின் எழிலில் மனதை பறிகொடுத்து இங்கேயே தங்கி விட்டதாகவும், அவருக்காக இங்கு கோவில் எழுப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

வேங்கடவன் கோவில் கொள்வதற்கு முன்பே இவர் இங்கே எழுந்தருளியதால் இவரை ஏழுமலையானின் அண்ணன் என்கிறார்கள். 

முதலில் இவரை தரிசித்து விட்டு பின்னர் அலமேல் மங்காபுரத்தில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசிக்க வேண்டும். இவரை தரிசித்து திருமலை ஏற அனுமதி பெற வேண்டும். 

திருமலையில் வராக தீர்த்தகரையில் உள்ள வராகமூர்த்தியை தரிசித்த பின்னரே திருவேங்கடனை தரிசிக்க செல்ல வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top