சகலவிதமான பாவங்களிலிருந்தும் விடுபட உதவும் ஸ்படிக லிங்க வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சகலவிதமான பாவங்களிலிருந்தும் விடுபட உதவும் ஸ்படிக லிங்க வழிபாடு பற்றிய பதிவுகள் :

ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவதால் வீடு முழுவதும் நேர்மறை அதிர்வுகள் ஏற்படுகிறது. ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்பவர்கள் லிங்கத்திற்கு பாலாலும், பழச்சாறுகளாலும், தூய நன்னீராலும் அபிஷேகம் செய்து, பூக்களால் பூஜித்து தூப தீபம் காட்டி வழிபட சகல பாவங்களும் நீங்கும். வீட்டில் ஐஸ்வர்யமும், சந்தோஷமும் பெருகும்.

மேலும், ஸ்படிக லிங்கத்திற்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் பெறலாம்.

மற்றவர்கள் மீது ஏவப்பட்ட ஏவல், பில்லி, சூனியங்கள் முதலியவற்றை எடுப்பவர்கள் அவை தங்களைத் திருப்பித் தாக்காமல் இருக்க ஸ்படிக லிங்க வழிபாடு செய்வார்கள்.

அதனால் அபிசார தோஷம் (ஏவல், பில்லி, சூனியங்களால் பிரச்சனை) உள்ளவர்கள் ஸ்படிக லிங்கத்தின் முன் மனமொடுங்கி தினமும் அரை மணி நேரம் தொடர்ந்து 21 நாட்கள் அமர்ந்தால் எல்லா தோஷங்களிலிருந்தும் விடுபடலாம். 

வியாபாரிகள் இந்த ஸ்படிக லிங்கத்தை வீட்டிலோ அல்லது தங்கள் வியாபார கேந்திரத்திலோ வைத்து வழிபடலாம். ஸ்படிக லிங்கத்தை முறைப்படி பூஜிப்பதால் வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைப்பதுடன் வியாபாரம் நன்கு விருத்தியடையும்.

மாணவர்கள் ஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் நல்ல ஞாபக சக்தியும், நல்ல எண்ணங்களும் மனதில் தோன்றும். ஸ்படிக லிங்கம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் வழங்கும்.

ஸ்படிக லிங்கத்தின் முன் சிவபெருமானை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி தேவியையும் வணங்கலாம். இதனால் பொருள் வளம் அதிகரிக்கும். 

சனிப்பெயர்ச்சி காலத்தில் உங்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வைத்து வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

நாம் ஸ்படிக லிங்கத்தை வணங்கும்போது நன்மைகள் வேண்டியே வணங்க வேண்டும். பிறரைக் கெடுக்கும் நோக்கத்துடன் வணங்கக்கூடாது. அப்படி செய்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்பட்டு தீமைகள் உண்டாகும். எனவே, நல்லதை நினைத்து வழிபட்டு அளவில்லா நன்மைகளை பெற்றிடுங்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top