கடன்களை தீர்க்கும் செவ்வரளி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கடன்களை தீர்க்கும் செவ்வரளி பற்றிய பதிவுகள் :

"அரளி" பூக்களில் எத்தனையோ வகைகள் உள்ளன. ஆனால் அரளி என்று சொன்னதும் சாதாரணமாக நம்மால் அழைக்கப்படும் மலர் செவ்வரளிதான். 

சிவந்த அரளிப் பூ எங்கும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடிய ஓரடுக்கு மலராகும். இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது. 

ஆனால்பெரும்பாலான பக்தர்களால் விரும்பி வாங்கப்படுவது செவ்வரளிப்பூதான். மகாவாராஹிக் குரிய மலர்களில் செவ்வரளி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அனைவருக்கும் கிடைக்கக்கூடிய எளிய மலர் செவ்வரளி, இம்மலர் சோலை, நந்தவனம், தோட்டம், பாதையோர பாலைவனம் என்ற பாகுபாடுகளின்றி, எங்கும் மிக எளிமையாக பூத்துக்குலுங்கும் அற்புத குணம் உடையது

சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலருக்கு விஞ்ஞான பூர்வமாக, காற்றிலுள்ள கார்பனின் அளவைக்குறைக்கக்கூடிய ஆற்றல் உண்டு. அதனால்தான் நமது தேசிய நெடுஞ்சாலைகளில் நாற்கரசாலைகளில் அக்கறையுடன் இந்த மலர் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. 

அம்மனை வழிபடும்போது நமது மனதை அம்மன் மீது ஒரு நிலைப்படுத்தி சிவப்பு அரளி கொண்டு பூஜை செய்தால், குடும்பச் சச்சரவுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும். மனம் திறந்து கடன் பிரச்சினைகளை கடவுளிடம் சமர்ப்பித்தவிட்டு மஞ்சள் அரளி கொண்டு பூஜை செய்தால் கடன் தொல்லை காணாமல் போகும். வேதனை மிகுதியால் சஞ்சலப்படுபவர்கள், வெள்ளை அரளி கொண்டு வேதபிரானை அர்ச்சித்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும். 

இத்தகைய பெருமை மிகு அரளிப்பூ, அனைத்து ஆலயங்களின் நந்தவனங்களிலும் செல்லக் குழந்தையாகவே வளர்க்கப்பட்டு வருகிறது. திருக்கரவீரம் மற்றும் திருக்கள்ளில் ஆகிய புண்ணிய தலங்களில் தல விருட்சமாகத் திகழகூடிய பெருமையையும் அரளி பெற்றுதுள்ளது. உத்திர நட்சத்திரக்காரர்கள் அரளிச்செடிகளை நடுவதும் வளர்ப்பதும் மிகவும் அல்லது என சொல்லப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top