ஒவ்வொரு பெளர்ணமிக்கு பின் வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி ஆகும். அந்த நாள் ஸ்ரீ காலபைரவருக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். அப்போது நம் குறை தீர வேண்டிக் கொண்டு ஸ்ரீ காலபைரவருக்கு விரதம் மற்றும் வழிபாடு நடத்தினால் மிக சிறப்பான பலன்களை வாரி வழங்குவார்.
ஸ்ரீ காலபைர் விரத முறை
அஷ்டமி அன்று அதிகாலையில் குளித்து வீட்டில் விளக்கேற்றி பைரவரை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். பகலில் ஏதாவது ஒரே ஒரு முறை மட்டும் சாப்பிட வேண்டும். சிவன் கோயிலுக்கு சென்று, அங்கிருக்கும் பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபாடு நடத்தலாம்.
பஞ்ச தீபம் என்றால் இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகியவற்றை தனித்தனியாக ஏற்ற வேண்டும். இந்த ஐந்தையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை ஏற்றக்கூடாது. தனித்தனியாக ஏற்றுவது நல்லது.
மாலையில் பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவதும், தயிர் சாதம் செய்தும், சர்க்கரைப் பொங்கல் படைத்து குழந்தைகளுக்கு, பக்தர்களுக்கு வழங்கினால் நல்லது.
தேய்பிறை அஷ்டமியில் சிகப்பு நிற ஆடை அணிந்து, சிகப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றி வர மிகவும் நல்ல பலன்களை பெறலாம். ராகு காலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், ருத்ராபிஷேகம் செய்தல், வடைமாலை சாற்றி வழிபடுவது நல்லது.
தினமும் ஸ்ரீ காலபைர் காயத்திரி மந்திரம் சொல்லி வழிப்படுதல் நலம் பயக்கும். ஸ்ரீ காலபைருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் நடக்கும்.
ஸ்ரீ காலபைரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார முன்னேற்றம், தன லாபம், பயம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்களும் கிடைக்கும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பைரவ காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை நிவர்த்தி ஆகும்.
நவகிரகங்களால் ஏற்படும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.
கஷ்டங்ளை போக்கும் பைரவ காயத்ரி மந்திரம்
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
ஸ்லோகம் :
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்