சிவன் ஆலயம் வழிபடும் முறைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவன் ஆலயம் வழிபடும் முறைகள் பற்றிய பதிவுகள் :

சிவபெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும், உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும், பிரளயக் காலத்தில் அவற்றை அழித்துத் தன்னுள் ஒடுக்கி சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிவபெருமானுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. இந்த பகுதியில் சிவன் கோவிலில் வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம். 

முதலில் சிவன் கோவிலை அடைந்தவுடன் ஓம் நமசிவாய என கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோவிலில் உள்ளே சென்றதும் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.

அதன் பிறகு நந்தி தேவரிடம் சென்று அவர் சிரசின் வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும். நந்தி தேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரம் ஜெபிப்பது சிறந்தது. 

அதன் பிறகு கருவறையில் இருக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சிவனை வழிபடும் சமயத்தில் ஓம் நம சிவாய என்னும் மந்திரத்தை கூறி வழிபடுவது நல்லது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால் சிவனுக்கு ஏதேனும் அபிஷேகம் செய்வது மேலும் சிறந்தது.

சிவபெருமானை வழிபட்ட பிறகு அன்னை பரமேஸ்வரியை வழிபட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் போன்ற சில ஆலயங்கள் அம்பிகைக்குரிய விஷேச ஆலயங்களாக இருக்கும். அங்கெல்லாம் அம்பாளை வணங்கிய பின்னர் சிவனை வணங்குவதில் தவறில்லை.

அம்பாளை வணங்கிய பின்னர் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். அந்த சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை கூறுவது நல்லது.

அதன் பிறகு கோவிலை வலம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாக சிவன் கோவிலை வலம் வருகையில் மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வலம் வருவது நல்லது. வலம் வருகையில் ஓம் நம சிவாய என்று மந்திரத்தை ஜெபித்தவாறே வலம் வர வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top