அகோர வீரபத்திரர் விரதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அகோர வீரபத்திரர் விரதம் பற்றிய பதிவுகள் :

அகோர வீரபத்திரருக்கு விரதமிருக்க விரும்புவோர் மாசிமாதம் கிருஷ்ணபட்சம், பிரதமைதிதி, பூரம் நட்சத்திரம், ஞாயிற்றுக் கிழமையன்று விரதம் தொடங்க வேண்டும். 

ஏனெனில் இந்நாளில் இரவு 12 மணிக்குத்தான் அகோர வீரபத்திரர் தோன்றினார் என்பர். திருவெண்காட்டில் அகோர வீரபத்திரருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர் தோன்றிய நாளில், நேரத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. 

மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் இரவில் அகோர பூஜை செய்யப்படுகிறது. கார்த்திகை மாதம் ஈசனுக்கு உகந்தது என்பதால் கார்த்திகை ஞாயிறு வழிபாடு சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 

இவ்வழிபாட்டில் பசுவின்பால், பால்சாதம், எலுமிச்சை சாதம், மஞ்சள் நிற இனிப்பு வகைகள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைப்பது சிறப்பாகும். 

அகோர வீரபத்திரரை ஈசனுக்குரிய திங்கட்கிழமையன்றும் பிரதோஷ நாளன்றும் நித்திய பிரதோஷ நேரத்திலும் சிவராத்திரி தினத்தன்றும் வழிபடுவது மிகமிக நன்று. 

இத்தகு வழிபாடுகள் வாழ்வியல் சிக்கல்களை நீக்கிடவும் எடுத்த செயல்களில் வென்றிடவும் உதவும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top