விரத நாட்களில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து அம்மனை வணங்க வேண்டும். ராஜ ராஜேஸ்வரி அம்மனின் பிரேம் போடாத எந்திரம் மற்றும் ராஜ ராஜேஸ்வரி அம்மனின் பிரேம் போட்ட படம் வைத்து, எந்திரம் மற்றும் படத்திற்கு பூக்கள் அணிவித்து தீப, தூப ஆராதனைகள் செய்து வணங்க வேண்டும்.
48 நாட்கள் விரதம் இருந்து ராஜ ராஜேஸ்வரி அம்மனை தியானிக்க வேண்டும்.
ராஜ ராஜேஸ்வரி அம்மனின் மந்திரத்தை தினமும் உங்களால் முடிந்தவரை சொல்லி வர வேண்டும். 48 நாட்களுக்குள் லட்சம் எண்ணிக்கையை மந்திரம் தொட்டால் மிகவும் சிறப்பு.
மாமிசம், மது போன்றவை நீக்கி விரதம் இருக்க வேண்டும். எந்த வீட்டில் விரதம் ஆரம்பிக்கிறோமோ அதே வீட்டிலேயே 48 நாட்களும் விரதம் இருக்க வேண்டும்.
வேறு வீடுகளிலோ, வெளியிலேயோ சென்று விரதம் நிறைவு செய்யக்கூடாது. இரவில் எங்கேயாவது வெளியில் தங்கி விட்டால் விரதம் நிறைவுற்றதாக ஆகிவிடும். மூன்று வேளைகளும் அம்மனுக்கு பூஜை செய்து வணங்க வேண்டும். அம்மனை மனதார தியானிக்க வேண்டும்.
பலன்கள் :
எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.
எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமை படுத்த முடியாது.
ஏவல், பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.
விரோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.
துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகிவிடும்.
அனைவரும் போற்றி புகழக்கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.
சித்து வேலைகள் கைகூடும்.
அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயில் கதவை தட்டும்.
தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.
அரசனும் பணியக்கூடிய தகுதி நமக்கு வந்து சேரும்.
ஒரு முறை இந்த விரதம் இருந்தால் அதன் முழு பலனும் 6 மாத காலம் மட்டுமே நீடிக்கும். அதன் பின் மறுபடியும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.