திருவாரூர் கோவிலின் சிறப்புகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவாரூர் கோவிலின் சிறப்புகள் :

9 ராஜகோபுரங்கள், 
80 விமானங்கள், 
12 பெரிய மதில்கள், 
13 மண்டபங்கள், 
15 தீர்த்தக் கிணறுகள், 
3 நந்தவனங்கள், 
3 பெரிய பிரகாரங்கள், 
100-க்கும் மேற்பட்ட சன்னதிகள் ஆகியவற்றுடன் இத்திருக்கோவில் பிரம்மாண்டமாகப் பரந்து விரிந்து சிறப்பாக அமைந்துள்ளது. 

கண்டீசர் இருக்குமிடத்தில் எமன் இருப்பதும் நின்ற நிலையில் நந்தி அமைந்திருப்பதும் இக்கோவிலின் பிற சிறப்புகளாகும். 

இக்கோவிலிலுள்ள தியாகராசருடைய 'அசபா நடனம்' இவ்வூர்த் திருவிழாக்களில் சிறப்பாக நடைபெறுகிறது. மனுநீதிச் சோழன் கதை, அழகிய கல் சித்திரமாகக் கீழைக் கோபுர வாயிலருகே காணப்படுகிறது. 

சுந்தரரின் மனைவியரான பரவையார் பிறந்த ஊர் இதுவே. பரவை நாச்சியாருக்கென தியாகராசர் கோவில் தெற்குக் கோபுரத்தின் தென்புறத்தில் தனி ஆலயம் உள்ளது. 

தண்டபாணிக் கோவில், இராஜதுர்கை கோவில், மாணிக்க நாச்சியார் கோவில், திருவாரூர்ப் பரவையுண் மண்டலி முதலியன இவ்வூரில் காணத்தக்கவை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top