ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பற்றிய பதிவுகள் :

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் தேதி (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 03.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ஆம் தேதி (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

ராசி : மேஷம்
ராகு : 12ம் இடம் 
கேது : 6ம் இடம்
பலன்கள் : அனுபவம் மற்றும் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.

ராசி : ரிஷபம்
ராகு : 11ம் இடம்
கேது : 5ம் இடம்
பலன்கள் : புதிய தேடல் மற்றும் சிந்தனையில் மாற்றம் பிறக்கும்

ராசி : மிதுனம் 
ராகு : 10ம் இடம்
கேது : 4ம் இடம்
பலன்கள் : தொழில் அனுபவமும், கல்வியில் புதுமையான சூழலும் அமையும்

ராசி : கடகம்
ராகு : 9ம் இடம்
கேது : 3ம் இடம்
பலன்கள் : ஆன்மிக ஈடுபாடு மற்றும் வலைப்பதிவுகளில் ஆர்வம் ஏற்படும்.

ராசி : சிம்மம்
ராகு : 8ம் இடம்
கேது : 2ம் இடம்
பலன்கள் : செயல்பாடுகளில் மாற்றமும் மற்றும் வரவுகளில் தாமதமும் உண்டாகும்

ராசி : கன்னி
ராகு : 7ம் இடம்
கேது : ஜென்ம ராசி 
பலன்கள் : சுகபோக சிந்தனைகளும் செயல்களில் ஆர்வமின்மையும் உண்டாகும்.

ராசி : துலாம் .
ராகு : 6ம் இடம்
கேது : 12ம் இடம்
பலன்கள் : எதிர்பாராத உதவிகள் மற்றும் புதிய கண்ணோட்டம் பிறக்கும்

ராசி : விருச்சிகம்
ராசி : 5ம் இடம்
கேது : 11ம் இடம்
பலன்கள் : ரசனை தன்மையில் மாற்றமும் மற்றும் சகோதர வகையில் புரிதலும் உண்டாகும்.

ராசி : தனுசு
ராகு : 4ம் இடம்
கேது : 10ம் இடம்
பலன்கள் : பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் செயல்களில் அனுபவம் வெளிப்படும். 

ராசி : மகரம்
ராகு : 3ம் இடம் 
கேது : 9ம் இடம்
பலன்கள் : புதுமையான முயற்சிகளும் மற்றும் இறை சிந்தனைகளும் மேம்படும்.

ராசி : கும்பம்
ராகு : 2ம் இடம்
கேது : 8ம் இடம்
பலன்கள் : பொருள் வரவு மற்றும் உரைகளில் கனிவும் வேண்டும்.

ராசி : மீனம் 
ராகு : ஜென்ம ராசி
கேது : 7ம் இடம்
பலன்கள் : வித்தியாசமான ஆசைகள் மற்றும் துணைவரிடத்தில் அனுசரிப்பும் வேண்டும்

இங்கு கூறப்பட்டுள்ள அனைத்து பலன்களும் பொதுவான பலன்கள் ஆகும். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப கோச்சார ராகு, கேது பெயர்ச்சியால் ஏற்படும் பலன்களின் மாற்றங்கள் உண்டாகலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top