குளிகை நேரங்களும் அதன் சிறப்பும்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து குளிகை நேரங்களும் அதன் சிறப்பும் பற்றிய பதிவுகள் :

பஞ்சாங்கத்தில் முக்கிய நேரங்களான நல்ல நேரம், எமகண்டம், ராகு காலம், குளிகை காலம் இவைகளில் குளிகை காலமானது ஒன்றை விரிவுபடுத்தி தரக்கூடியதாகும். 

இது காரிய விரித்தி நேரமாக கருதப்படுகிறது. சனியின் புதல்வரான மாந்தியின் காலமே குளிகை காலமாக கருதப்படுகிறது.

இத்தகைய இந்த குளிகை காலமானது செய்யும் காரியத்தில் அதிஷ்டத்தையும் விரிவையும் தரக்கூடியது என்பது ஐதீகம். காரிய அனுகூலம் சார்ந்த விடயங்களை ஆரம்பிக்கவும் லாபகரமான விடயங்களை தொடங்கவும் குளிகையை பயன்படுத்த வேண்டும்.

சுமார் 3¾ நாழிகை (1½ மணிநேரம்) கொண்டது இந்த குளிகை காலம் ஆகும். வார நாட்களில் குளிகை நேர விபரம் வருமாறு. (சூரிய உதயத்திற்கு ஏற்ப வித்தியாசப்படும்.)

ஞாயிறு - 3 - 4:30 மாலை
திங்கள் - 1:30 - 3 மதியம்
செவ்வாய் - 12 - 1:30 பகல்
புதன் - 10:30 - 12 பகல்
வியாழன் - 9 - 10:30 காலை
வெள்ளி - 7:30 - 9 காலை
சனி - 6 - 7:30 காலை

இத்தகைய குளிகை காலம் வரும் நேரத்தில் மேற்கொள்ள கூடிய காரியங்களாக,

* நகை வாங்குவது, 

* காணி வாங்குவது,

* சொத்துக்கள் வாங்குவது, 

* கடனில் ஒரு பங்கு கொடுப்பது,

* வங்கி கணக்கு ஆரம்பிப்பதும் பணம் வைப்பிலிடுவது.

* புதிய வியாபாரம் ஆரம்பிப்பது.

* தானங்கள் புண்ணிய காரியங்கள் செய்வது.

* பரிகாரம் செய்வது.

* மந்திரங்கள் சொல்வது, உபாசனை செய்வது.

மேற்படியான காரியங்களை செய்யலாம். 

செய்ய கூடாத காரியங்களாக,

* திருமணம் செய்வது அதிலும் மாங்கல்ய தாரணம் வைக்க கூடாது.

* மரண சடங்குகளை ஆரம்பிப்பதோ, பிரேத உடலை இறுதி கிரியைக்கு எடுப்பது ஆகாது. 

* சொத்துக்கள் விற்பது,

* வீடு திருத்தம் செய்வது.

* கடன் வாங்குவதும் கொடுப்பதும்.

* அடகு வைப்பது.

* அறுவைசிகிச்சை செய்வது.

* மருந்து உண்ணுவது.

* மருத்துவரை பார்க்க செல்வது.

* வரன் பார்க்க கூடாது.

* தாலி கயிறு மாற்றுவது

* கும்பாபிஷேகம் செய்வது. 

மேற்படியான காரியங்களை தவிர்ப்பதும் நல்லது. இத்தகைய குளிகை காலத்தில் வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top