நாட்காட்டியை கிழிக்கும்போது அதில் இஷ்டி காலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்து இருப்பீர்கள். அதென்ன இஷ்டி காலம் என சிலர் மனதில் எழும்.
இஷ்டி காலம் என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதி பகுதியாகும். பிரதமை திதியின் முதல் மூன்று பாகமாகும்.
இஷ்டி காலங்களில் எந்த தேவரின் ஆசிர்வாதமும், அனுகூலமும் வேண்டி யாகங்கள் மற்றும் பூஜைகள் செய்கின்றோமோ அந்த இடத்தில் அவர்கள் சூட்சம உருவங்களாக நின்று நாம் வளர்க்கும் யாகத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லப்படும் காலம்.
இஷ்டி காலங்களில் செய்யும் ஹோமங்கள், பூஜைகள் மற்றும் தான தர்மங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும்.
இஷ்டி காலத்தில் பூஜைகள், ஹோமங்கள் செய்வது சகல தேவர்களின் ஆசியைப் பெற்றுத்தரும்.
நாம் விரும்பும் தேவர்களின் ஆசியைப் பெற்று தரும் வல்லமை கொண்ட இஷ்டி காலங்களில் அவர்களுக்கான பொருள்களை தானமாக அளித்தும், ஹோமங்கள் செய்தும் வாழ்வில் வளம் அடைவோம.