திருமணம் நடைபெற வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் விரத வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருமணம் நடைபெற வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் விரத வழிபாடு பற்றிய பதிவுகள் :

ராகு காலங்களில் விரதமிருந்து வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும். 

வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.

விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். 

இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும்.

அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் விரதமிருந்து வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும். 

இந்த விரத வழிபாட்டை தொடர்ந்து செய்து வர வேண்டும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top